இத்தலார் அரசு மருத்துவமனைக்கு புதிய மருத்துவர் குடியிருப்பு கட்டிட துவக்க விழா... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 4 April 2023

இத்தலார் அரசு மருத்துவமனைக்கு புதிய மருத்துவர் குடியிருப்பு கட்டிட துவக்க விழா...


நீலகிரி மாவட்டம், குந்தா தாலுக்கா உதகை ஊராட்சி, இத்தலார் பகுதியில், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் இளித்துரை கா. ராமச்சந்திரன் அவர்கள், மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் அவர்களுடன் இணைந்து, ரூ.65 இலட்சம் மதிப்பில் இத்தலார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர் குடியிருப்பு மற்றும் ரூ.60 இலட்சம் மதிப்பில் ஹேப்பிவேலியில் அரசு துணை சுகாதார நிலைய புதிய கட்டடப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி பணிகளை துவக்கி வைத்தனர்.




 மேலும் அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி விழா சிறப்புரை ஆற்றினார் இதில் இத்தலார் பகுதியை சார்ந்த பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


 அரசு மருத்துவமனை குடியிருப்பு மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய தமிழக அரசிற்கும் தமிழக முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கே.எஸ்.டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:

Post a Comment

Post Top Ad