நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை அக்னி சிறகுகள் அறக்கட்டளை ஆகியவை இணைந்து நிலக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இலவச கண் சிகிச்சை இந்த முகாமில் கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். டிவிஎஸ் சீனிவாசன் சேவைகள் அறக்கட்டளை களப்பணியாளர்கள் தெய்வலட்சுமி, அக்கினி சிறகுகள் தன்னார்வலர்கள் வனராஜ் கோகிலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நெலாக்கோட்டை அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவ அலுவலர் கிருஷ்ணன் முகாமினை துவக்கி வைத்தார். உதகை மருத்துவக் கல்லூரி கண் மருத்துவ குழுவினர் நோயாளிகளுக்கு சிகிச்சைகள் அளித்தனர் இந்த முகாமில் 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர் ஐந்து பேர் கண்புறை அறுவை சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் நிகழ்ச்சியில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.இறுதியாக நீலமலை ராஜா நன்றி கூறினார்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment