நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் துவங்கி உள்ளது...
நீலகிரி மாவட்டம் உதகையில் கோடை சீசன் துவங்கி உள்ள நிலையில் கடந்த இரண்டு நாட்களாக மழை பெய்து வருகிறது இதனால் சுற்றுலா பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர் அதேப்போல் கோத்தகிரி பகுதியிலும் மழை பெய்து வருகின்றது. கோடை வெயிலில் மழை பெய்து வருவதால் மக்கள் மிகவும் மகிழ்ச்சியாக கொண்டாடுகின்றனர்.
இதே சமயம் நேற்றைய தினம் உதகையை அடுத்துள்ள எமரால்டு பகுதியில் ஆலங்கட்டி மழை பெய்தது குறிப்பிடத்தக்கதாகும்.
இதனால் நீலகிரி மாவட்ட பொதுமக்கள் மட்டுமின்றி கோடை சீசன் காரணமாக குளிர்ச்சியை அனுபவிக்க வரும் சுற்றுலா பயணிகளும் நீலகிரி மாவட்டத்தின் தட்பவெட்ப நிலையை அனுபவித்து மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.
தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் விஷ்ணுதாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....


No comments:
Post a Comment