நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர திமுக சார்பில் மாதம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 2 April 2023

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர திமுக சார்பில் மாதம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது...

 

நீலகிரி மாவட்டம் கூடலூர் நகர திமுக சார்பில் கழக தலைவர் மாண்புமிகு தளபதியார் அவர்களின் 70-வது பிறந்தநாள் விழா மாதம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது.




 அதன் ஒரு பகுதியாக கூடலூர் நகரம் வார்டு எண் 19 KK நகர் பகுதியில்  வார்டு செயலாளர் கனகராஜ் அவர்களின் தலைமையில் கூடலூர் நகரக் கழக செயலாளர் ச.இளஞ்செழியன் அவர்களின் முன்னிலையில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் தலைமை செயற்குழு உறுப்பினர் மு திராவிடமணி அவர்கள் கழக இருவண்ண  கொடியினை ஏற்றி வைத்தார் துணை செயலாளர் நாகேஸ்வரி இனிப்புகள் வழங்கினார்  அதனைத் தொடர்ந்து கூடலூர் நகர  பாஜக SC பிரிவின் தலைவர் கங்காதரன் மற்றும் செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் இருபதுக்கு மேற்பட்ட பாஜக வினர் அக்கட்சியிளிருந்து விலகி தங்களை திமுக வில் இணைத்துக்கொண்டனர்  இந்நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் செல்வராஜ் துணைச் செயலாளர் ஜபருல்லா மாவட்ட பிரதிநிதி மணிகண்டன் பேரூர் கழக செயலாளர் சுப்பிரமணி தலைமை கழக பேச்சாளர் k.தங்கராஜ்  வார்டு கழக அவைதலைவர் சுப்பையா நகர் மன்ற உறுப்பினர் நிர்மல் மகளிர் அணியை சேர்ந்த ராணி செல்லம்மாள் செல்வராஜ்  மணி மற்றும் கழகத் தோழர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர் நிறைவாக நகர பிரதிநிதி மூசா நன்றி கூறினார்.

தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad