ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இன்று அனைத்து கட்சிகள் சார்பில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 31 March 2023

ஒன்றிய பாஜக அரசை கண்டித்து இன்று அனைத்து கட்சிகள் சார்பில் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம்

 


நீலகிரி மாவட்டம் கூடலூரில் 
ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போட்டு பழிவாங்கும் நடவடிக்கையாக எம். பி பதவியை பறித்து பாராளுமன்றத்திற்கு வரவிடாமல் தடுத்த மோடி அரசை கண்டித்து 
கூடலூரில்  காங்கிரஸ்,  திமுக,  விடுதலை, சி பி எம்,சி பி ஐ,
சிறுத்தைகள், இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக், மக்கள் ஜனநாயக 
கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து கூடலூர் நகராட்சி அலுவலகத்தில் இருந்து கூடலூர் பழைய பேருந்து நிலையம் காந்தி திடல் வரை 
மாபெரும் பேரணி நடத்தினார். பேரணியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்   கலந்து கொண்டு மோடி அரசுக்கு எதிராக தமிழிலும் மலையாளத்திலும் கோஷங்கள் எழுப்பப்பட்டது.


ராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கம் செய்த பாஜக அரசை கண்டித்து நாடு முழுவதும் ஒன்றிய அரசை கண்டித்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம் கூடலூர் சட்டமன்ற தொகுதியில் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து அனைத்து கட்சிகள் சார்பில் கருப்புச்சட்டை அணிந்து  இன்று ஆர்ப்பாட்டம் மற்றும் பேரணி  நடைபெற்றது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:

Post a Comment

Post Top Ad