எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் 9.30 மணிளவில் அரசு தொடக்கப் பள்ளி எமரால்டு எண்ணும் எழுத்தும் கொண்டாட்டம் சிறப்பாக 1, 2, 3 வகுப்பில் பயிலும் மாணவர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் அனைத்து பெற்றோர்களும் ஆர்வமுடன் தன் குழந்தைகள் படிக்கும் வகுப்பறையில் மாணவர்கள் செய்த செயல்பாடுகளை பார்த்து மிகவும் ரசித்து அவர்கள் அந்தத் திட்டத்தைப் பற்றி நன்கு புரிந்து கொண்டனர்.
முதலில் தலைமை ஆசிரியர் திரு. அர்ஜுனன் பெற்றோர்களை வரவேற்றுப் பேசினார் அதன் பிறகு உதவி ஆசிரியர் சாரா அவர்கள் எண்ணும் எழுத்தும் திட்டத்தின் சிறப்பம்சங்களை பெற்றோர்களுக்கு வலியுறுத்தி கூறினார். இந்தத் திட்டத்தின் மூலம் எந்தெந்த பயன்களை மாணவர்கள் பெறுகிறார்கள் என்று பேசினார் செயல்பாடுகள் முடிந்த பிறகு பெற்றோர்களுக்கு சில போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்ற பெற்றோர்கள் சிறப்பிக்கப்பட்டனர். இறுதியில் தேநீருடன் இந்த எண்ணும் எழுத்தும் விழா நடைபெற்றது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment