இந்நிலையில் எமரால்டு அணைகட்டில் நீரில் உள்ள மின் மோட்டார் ஆனது பழுதடைந்து அத்தியாவசிய தேவையான குடிநீர் வழங்க முடியாத நிலை இருந்து வந்த காரணத்தினால் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் உதவி நிர்வாக பொறியாளர் திரு செல்வகுமார் அவர்களின் உத்தரவின் பேரில் மின் மோட்டார் பழுது நீக்கும் பணி விரைவாக நடைபெற்றது இந்த மின் மோட்டார் பழுது நீக்கும் பணியின் போது தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை வழங்கி தக்க அறிவுரையும் வழங்கிய தமிழ்நாடு தீயணைப்பு துறை உதகை நிலைய அலுவலர் திரு பிரேமானந்தன் அவர்களும் தகுந்த அறிவுரையும் ஆலோசனையும் வழங்கி தகுந்த பாதுகாப்புடன் மின் மோட்டார் பழுது நீக்கும் பணி வெகு விரைவாக நடைபெற்று மக்களுக்கு அத்தியாவசிய தேவையான குடிநீர் வழங்கும் பணி வழக்கம் போல சீராகி குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
தடைபட்ட குடிநீரை வெகு விரைவாக சீரமைத்து குடிநீர் வழங்கிய தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்திற்கும் அதில் பணிபுரிந்த ஊழியர்களான மேற்பார்வையாளர் திரு அறிவகன் மற்றும் அவரது குழுவினரான திரு பாரதி திரு சிவராஜ் திரு ராஜேஷ் திரு பாஸ்கரன் ஆகியவர்களுக்கும் தக்க அறிவுரை வழங்கிய தமிழ்நாடு தீயணைப்பு துறையினருக்கும் மூன்று பஞ்சாயத்துகளின் மூலமாக பயன் பெற்று வரும் 55 கிராமங்களின் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர். அவர்களுடன் சேர்ந்து இந்த பொதுமக்களின் அத்தியாவசிய தேவையான குடிநீர் வழங்கும் பணியினை வெகு விரைவாக முடித்த ஊழியர்களுக்கும் இதில் ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து அதிகாரிகளுக்கும் தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவின் சார்பாகவும் மனமார்ந்த நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறோம்...
தமிழக குரல் செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் K.S.T மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...





No comments:
Post a Comment