உலக நீர் நாள் விழிப்புணர்வு நீரை மாசினால் நோய்கள் விழிப்புணர்வில் தகவல் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 24 March 2023

உலக நீர் நாள் விழிப்புணர்வு நீரை மாசினால் நோய்கள் விழிப்புணர்வில் தகவல்

 


பந்தலூர் அருகே உப்பட்டி பாரத மாதா மேல்நிலைப்பள்ளியில் கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம், பள்ளி  குடிமக்கள் நுகர்வோர் மன்றம், ஏகம் பவுண்டேசன் ஆகியன சார்பில் உலக நீர் நாள் முன்னிட்டு நீர் சேமிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. 

பள்ளி தலைமை ஆசிரியர் கீவர்கீஸ் தலைமை தாங்கினார். கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் பேசும்போது. 




உலகில் நீர் மூன்றில் ஒரு பங்காக உள்ளது. அதில் 97.5 சதவீதம் கடல் நீராகவும் உள்ளது. மக்கள் பயன்படுத்தும் நீரின் அளவு வெறும் 0.5 சதம். அந்த நீரில் முறையாக பயன்படுத்தாமல் கழிவுகளில் கலந்து விடுவதால் சுத்தமான தண்ணீர் கிடைப்பது குறைந்து வருகிறது. நீரை முறையாக பராமரிப்பது அவசியமாகும். நீர் ஆவியாகவும், நீர் நிலத்தடிக்குள் செல்லவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மரங்கள் வளர்ப்பதால் மேகங்களை ஈர்த்து மழை அதிகரித்து மக்களுக்கு விவசாயம் குடிநீர் தேவைக்கு தண்ணீர் கிடைக்கும். நீர் மாசுபடாமல் தடுக்க நம்மால் இயன்ற அளவு முயற்சிகள் எடுக்க வேண்டும் என்றார்.




ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பளர் ரவீந்திரன், ஆல் த சில்ரன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அஜித் ஆகியோர் நீரின் அவசியங்கள் குறித்து பேசினார். பள்ளி மாணவர்கள் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர் 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...





No comments:

Post a Comment

Post Top Ad