நஞ்சில்லா உணவு குறித்த கருத்தரங்கம்
அம்பலமூலா அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆதிரெங்கம் நெல் ஜெயராமன் பாரம்பரிய நெல் பாதுகாப்பு மையம் மற்றும் நெல்லியாலம் நுகர்வோர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் இணைந்து பள்ளி மாணவர்களிடையே பாரம்பரிய நெல் ரகங்கள் குறித்தும் சிறுதானியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக நஞ்சில்லா உணவு கருத்தரங்கம் நடைபெற்றது, நிகழ்ச்சிக்கு நுகர்வோர் பாதுகாப்பு சங்க தலைவர் ரஜினிகாந்த் முன்னிலை வகித்தார், பள்ளி துணை தலைமை ஆசிரியர் ஜார்ஜ் தலைமை தாங்கினார்.
நெல்ஜெயராமன் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜிவ் பேசுகையில் நம்மிடம் தொலைந்து போன பாரம்பரிய நெல் ரகங்கள் ஆன ஆத்தூர் கிச்சடி, தூயமல்லி, காட்டுயானம், கருப்பு கவுனி, சீரக சம்பா, வாடன் சம்பா, துளசி வாசனை சம்பா, முடுமுழுங்கி, மாப்பிளை சம்பா, பூங்கார், குள்ளக்கார், நவரா, அறுபதம் குருவை போன்ற பாரம்பரிய நெல் ரகங்களில் உள்ள மருத்துவ குணங்கள் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் மாணவரிடம் எடுத்து கூறினார். நெல் ஜெயராமன் அமைப்பின் உயர்மட்ட குழு தலைவர் அசோகன் பேசுகையில் கம்பு, கேழ்வரக்கு, தினை, சாமை, வரகு, கொள்ளு, குதிரை வாலி போன்ற சிறு தானியங்கள் குறித்தும் அதன் சிறப்புகள் குறித்தும் எடுத்துரைத்தார், மேலும் அரசு இந்த வருடத்தை சிறுதானிய ஆண்டு ஆக அறிவித்திருப்பதால் நமது உணவில் ஒரு வேலையாவது சிறுதானியங்களை பயன்படுத்த வேண்டும் என்று மாணவர்களிடம் வேண்டுகோள் விடுத்தார், நிகழ்ச்சி நிறைவாக நுகர்வோர் பாதுகாப்பு சங்க செயலாளர் ஜோதி பிரகாஷ் நன்றி கூறினார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment