தர்மபுரியில் யானை கூட்டத்திலிருந்து பிரிந்த குட்டி யானை 40 அடி ஆழ கிணற்றில் விழுந்தது. நீண்ட போராட்டத்துக்குப் பின் வனத்துறையினர் அந்த குட்டி யானையை மீட்டனர். பின்பு ஒரு வார காலமாக வனத்துறையினர் குட்டியை பாதுகாத்து வந்த நிலையில் தாய் யானையுடன் சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டனர். இந்த முயற்சி பலனளிக்காத நிலையில் குட்டி யானையை நீலகிரி மாவட்டம் முதுமலை யானைகள் முகாமிற்க்கு கொண்டு செல்ல வனத்துறை முடிவு செய்து கடந்த 17ஆம் தேதி முதுமலை யானைகள் முகாமிற்க்கு கொண்டு வந்தனர். இந்த குட்டி யானையை "தி எலிபன்ட் விஸ்பரர்ஸ்" திரைப்படத்தில் நடித்த பொம்மன், பெல்லி ஆகிய இருவர் பராமரிக்க அரசு உத்தரவிட்டது. இதையடுத்து அந்த குட்டி யானை பொம்மன், பெல்லி ஆகிய இருவருடன் கொஞ்சி விளையாடும் வீடியோவை வனத்துறை செயலர் சுப்ரியா சாகு டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் சிவா காந்த் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment