நீலகிரி மாவட்டம் குன்னூர் காந்திபுரம் பகுதியில் சுமார் 74 வருடங்களாக இயங்கி வந்த அரசு நகராட்சி நடுநிலைப் பள்ளியில் இன்று முதல் முறையாக விளையாட்டு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் பள்ளியின் தலைமை ஆசிரியை,ஆசிரியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் பலரும் கலந்துக்கொண்டனர்.
இதில் நம் குன்னூர் அப்துல் கலாம் நினைவு அறக்கட்டளை நிர்வாகிகள் அவர்களை வரவேற்றனர் மேலும் விளையாட்டுப் போட்டிகள் கலை நிகழ்ச்சிகளில் வென்ற மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பதக்கங்களும் நம் அறக்கட்டளையின் மூலம் வழங்கினோம். இந்த விளையாட்டு விழாவில் குழந்தைகளின் பெற்றோர்களும் விளையாடி வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக மேற்கு மண்டல ஒருங்கிணைப்பாளர் KST மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment