பந்தலூரை அடுத்துள்ள அத்திக்குன்னா கண்ணடியன் பாடி பகுதியில் நீண்ட நாட்களாக அமைக்ப்படாத கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி துவங்கியதால் மக்கள் மகிழ்ச்சி.....
பந்தலூரை அடுத்துள்ள அத்திக்குன்னா கண்ணடியன் பாடி என்ற பகுதி இங்கு தோட்டத்தொழிலாளர்கள் அதிகமாக வாழக்கூடிய பகுதியாகும் . இங்கு உள்ள குடியிருப்பு பகுதிக்கு சரி முறையில் கழிவு நீர் கால்வாய் கிடையாது கடந்த ஆட்சி காலக்கட்டத்தில் மன்ற கூட்டங்களில் கால்வாய் அமைத்து தர வேண்டு என அப்பகுதி மக்கள் வேண்டு கோள் விடுத்தனர் ஆனால் பணி நடைபெற எந்த முயற்சி எடுகபடவில்லை .
இன்னிலையில் ஆகஸ்ட் செப்டம்பர் மாதங்களில் கன மழை பெய்வது வழக்கம் இன்நேரத்தில் குடியிருப்பு பகுதிகளில் மழை நீர் வீடுகளில் உள்ளே புகுந்து விடும் காரணம் அந்ந பகுதியில் கழிவு நீர் கால்வாய் இல்லாத காரணத்தால்.
இன்னிலையில் அந்த பகுதி வார்டு உறுப்பினரும் மாவட்ட விவசாய தொழிலாளர் அணி அமைப்பாளருமான எம்.பி.ஆலன் அவரிடம் அப்பகுதி மக்கள் குறகளை எடுத்து கூறினர் இதன் காரணமாக இந்த பிரச்சனையை மன்ற கூட்டத்தில் எடுத்துறைத்தார். இதன் பயனாக இன்றைய தினம் பொது நிதியிலிருந்து ஒதுக்கப்பட்ட 10. லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இன்றைய தினம் கண்ணடியன் பாடி பகுதிக்கு கழிவு நீர் கால்வாய் அமைக்குப் பணிக்காக பூஜை யானது.11.ஆம் வார்டு உறுப்பினரும் மாவட்ட விவசாய தொழிலாளர்கள் அணி அமைப்பாளருமான எம்பி.ஆலன் தலைமையில் நடைபெற்றது ..
இந்த பூமி பூஜை நிகழ்வில் நெல்லியாள நகர மன்ற தலைவர் திருமதி சிவகாமி.துனை தலைவர் நாகராஜ். முன்னால் கவுன்சிலர் சிவகௌரிகண்ணன். மாவட்ட துனை அமைப்பாளர் மூர்த்தி .அவை தலைவர் ராஜசேகர். பந்தலூர் ஒப்ந்தகாரர் தீபக்ராம்.மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டனர் இந்த பணி துவங்கப்படுவதை கண்ட அப்பகுதி பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment