தேயிலை உற்பத்தி குறைவு தோட்ட விவசாயிகள் கவலை... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 28 March 2023

தேயிலை உற்பத்தி குறைவு தோட்ட விவசாயிகள் கவலை...

 


நீலகிரி மாவட்டம் கூடலூர் பந்தலூர் போன்ற பகுதிகளில் வெயில் தாக்கம் அதிகரித்து வருகிறது இதனால்  தோட்டதொழிலாளர்கள் தேயிலை உற்பத்தி குறைவு தோட்ட விவசாயிகள் கவலை...


தற்போது கூடலூரில் வெயில் தாக்கம் அதிகளவு காணப்படுகிறது மார்ச் ஏப்ரல் மாதங்களில்  வெயில்  தாக்கம் அதிகாரிக்கு தொடங்கிவிடும் இந்தருணத்தில் தேயிலை சாகுபடி  பாதிக்கப்படும் இந்த வெயில் தாக்கத்தால் தேயிலை செடிகள்  கருகி விடுகிறது. இதனால் பெரிய கம்பனி தோட்டங்களில் பனி புயிய கூடிய  தொழிலாளர்கள் தேயிலை இலைகள் அதிக மகசூல்  எடுக்க முடியாத சூழல் உள்ளது  ஆனால் தேயிலை தோட்ட சூப்ரவைசர்கள் அதிக தேயிலை பறிக்க வேண்டும் என கூறுகிறார்.


சராசரி ஒருவர் ஒரு நாளைக்கு முழு சம்பளம் பெர 45.கிலோ கேட்கின்றனர் அப்படி எடுக்களை என்றார் அரை சம்பளம் தான் கிடைக்கும் இந்த சூழலில்  தோட்டங்களை பணிபுரியக்கூடிய தோட்டத்து தொழிலாளர்கள் அதிவெயில் தாக்கத்தை தாக்குப் பிடிக்க முடியாமல் இவர்கள் தலையில் குடைகளை போன்ற ஒரு தொப்பியை தலையில் அணிந்து கொண்டு தேயிலை சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது தேயிலை மகசூல் மிகவும் குறைந்து காணப்படுவதால் தோட்ட தொழிலாளர்கள் நாள் ஒன்றுக்கு 50 கிலோ எடுக்கக் கூடிய இடத்தில் தற்போது 25 கிலோ 30 கிலோ எடுக்கக்கூடிய சூழல் ஏற்படுவதினால் இவர்களுக்கு தோட்ட மேலாளர்கள் தேயிலை பறிப்பது குறைவாக உள்ளது என  அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.


 இதனால் தனியார் தேயிலை தோட்ட ஊழியர்கள்  பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் வருவாய் குறைவாக கிடைப்பதன் காரணமாக தனியா தோட்டத்தில்  வேலை செய்யக்கூடிய தோட்ட தொழிலாளர்கள் கேரளா கர்நாடகா போன்ற மாநிலங்களுக்கு அங்கு தரக்கூடிய அதிக சம்பளத்தை எதிர்பார்த்து செல்லக்கூடிய சூழல் ஏற்பட்டுள்ளது அதிக மகசூல் பெற  தோட்டங்களில் பிங்குளர் மூலம் தேயிலை செடிகளுக்கு தண்ணீர் கிடைக்க செய்தால் தேயிலை மகசூல் பெறலாம் என தோட்ட தொழிலாளர்களின் கருத்து....


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad