மேலும் இப்போதைக்கு குடிக்கவோ சமைக்கவோ நீரின்றி 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இத்தலார் கிராமத்தில் இருந்து குடிநீர் சேகரித்து பயன்படுத்தும் நிலையில் உள்ளது இந்த கழிவு நீரை கொட்டிச் சென்ற வாகனத்தின் என்னையும் மக்கள் குறித்து வைத்துள்ளனர் அதன்படி அவர்கள் கூறும் பொழுது அந்த வாகனத்தின் எண்ணாக TN 50 2963 கழிவு நீர் சேகரிக்கும் வாகனம் அந்த வாகனத்தின் பெயர் பலகை மாலதி செப்டிக் டேங்க் கிளீனர் எனவும் கூறினர்.
. இதை அறிந்து விரைந்த நமது தமிழக குரல் இணையதள குந்தா செய்தியாளர் தீனதயாளன் அங்கு சென்று ஊராட்சித் தலைவர் திருமதி சசிகலா மூர்த்தி அவர்களிடம் தொடர்பு கொண்ட போது இது பற்றி இன்று காலையில் தான் தெரிந்தது என்று கூறி உடனடியாக அந்த இடத்திற்கு விரைந்து வந்து சுகாதாரத் துறை காவல் துறை மற்றும் ஊராட்சியின் அனைத்து அதிகாரிகளும் அங்கு வந்து உடனடியாக இதற்கு நல்ல தீர்வு காணப்படும் எனவும் வருகின்ற ஒரு வார காலத்திற்கு குடிநீர் தொட்டி மூலம் இந்த பகுதிக்கு குடிநீர் வழங்கப்படும் எனவும் உடனடியாக இந்த குடிநீர் தொட்டி குளோரிநேசன் செய்யப்பட்டு சுத்தகரிப்பு செய்து மீண்டும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு நல்ல முறையில் வழங்கப்படும் எனவும் இந்த பகுதிக்கு புதிய குடிநீர் தொட்டி அமைத்து தரப்படும் எனவும் இந்த கழிவு நீரை கொட்டிச் சென்ற வாகனத்தை உடனடியாக பிடித்து அவர்களுக்கு உரிய தண்டனை காவல்துறை மூலம் பெற்று தரப்படும் எனவும் நமது செய்தியாளர்களுக்கும் பொதுமக்களுக்கும் உறுதிகூறி சென்றுள்ளனர்.
இதனால் இந்த கழிவுநீர் பிரச்சனையை உடனடியாக தீர்க்க உதவிய தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்திற்கும் நமது நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவிற்கும் இங்கு வந்து உடனடியாக செய்திகளை சேகரித்த தமிழக குரல் குந்தா தாலுக்கா செய்தியாளர் தீனதயாளன் அவர்களுக்கும் இந்த பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என உறுதி அளித்த நஞ்சநாடு ஊராட்சி தலைவர் திருமதி சசிகலா மூர்த்தி அவர்களுக்கும் பொதுமக்கள் நன்றி கூறினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக குந்தா தாலுக்கா செய்தியாளர் தீனதயாளன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...





No comments:
Post a Comment