கூடலூர் பஜாரில் வைத்து எஸ்.என்.டி.பி. நீலகிரி யூணியன் கிளை சார்பாகஸ்ரீ நாராயணகுரு கோவிலின் சிலை திறப்பு விழா - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday, 10 March 2023

கூடலூர் பஜாரில் வைத்து எஸ்.என்.டி.பி. நீலகிரி யூணியன் கிளை சார்பாகஸ்ரீ நாராயணகுரு கோவிலின் சிலை திறப்பு விழா

 


கூடலூர் பஜாரில்  வைத்து எஸ்.என்.டி.பி. நீலகிரி யூணியன் கிளை சார்பாகஸ்ரீ நாராயணகுரு  கோவிலின் சிலை நிருவுதல் திறப்பு விழா நடைபெற்றது...


  SNDP நீலகிரி யூணியனின் பந்தலூர் கிளையில், ஸ்ரீநாராயணகுருதேவரின் சீடர்களில் ஒருவரான பூஜனீய நடராஜகுரு ஸ்வாமி அவர்களால்  பிரதிஷ்டை நடத்தப்பட்ட பழமையான ஸ்ரீ நாராயணகுரு  கோவிலின் மறு சீரமைப்பு வேலைகள் நடைபெற்று  புதிதாக கோவில் கட்டும் வேலைகளின் ஒரு பாதியாக கோவிலின் பாலாலய பிரதிஷ்டை 10-03-2023 வெள்ளிக்கிழமை அன்று சிவகிரி மடம் தந்திரி பிரஹ்ம்மஸ்ரீ சிவநாராயண தீர்த்த சுவாமிகளின் தலைமையில் நடைபெற்றது .இன்நிகழ்ச்சியில்தலைமை மோகன்செயலாளர் ஹரிதாஸ்.பொருலாளர் வல்சராஜன். எஸ்.என்.டி.பி சங்கத்தின் மாவட்ட செயலாளர் பிதாம்பரன் .மாவட்ட பொது செயலாளர் பிந்துராஜ். மாநிலசெயற்குழு உறுப்பினர் அனில். ஆன்மிக சொற்பொழிவு சிவநாராயணா தீர்த்தசுவாமிகள் சிவகிரி மடம்கேரளா.கமிட்டி உறுப்பினர்கள் அஜந்தாஸ்டூடியோ பிரசாந்த் ஆதர்ஸ் .செந்தாமரை .ரஜினி ஸ்ரீ. மகேஸ்உறுப்பினர், விலாசினி, ஜயா ரவிகுமார், கிரீஷ்மா சுதீப், தினூப், ரன்ஜித், சுரேஷ், சின்ஜுலால், செந்தாமரை, வல்சகுமார், ஆதர்ஷ், பிரசாந்த், ரஜனீஷ், குஞ்சிக்கண்ணன், மகேஷ், சரிதா, சாந்தா.



நிகழ்ச்சியில்  காலை 06.00 மணி. குருபூஜை காலை 07.00 மணி. கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம். காலை 09. 00 மணி. கலச பூஜை, தொடர்ந்து பாலாலய பிரதிஷ்டை. காலை 11.00 மணி. ஆன்மீக சொற்ப்பொழிவு. பிரஹ்ம்மஸ்ரீ. சிவநாராயண தீர்த்த சுவாமிகள். நிகழ்ச்சி துவக்கமாக ஒரு ஜாதி,  ஒரு மதம், ஒரு தைவம் மனிதனுக்கு, மதம் எதுவாயினும் மனிதர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று கூறிக்கொண்டு ஜாதி மத வேறுபாடுகளின்றி மனிதர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வாழ்வதின் நற்பலன்களை எடுத்துரைத்து, தனது கொள்கையை பரப்புவதர்க்காகெ இயக்கங்களின் தாய் என்று அழைக்கப்படும் ஸ்ரீநாராயண தர்ம பரிபாலன சங்கத்தை (SNDP) உருவாக்கியவர் ஸ்ரீ நாராயண குருதேவர். மதங்களை உருவாக்குவதைவிட மேலானது வள்ளுவத்தை பின்பற்றுவது என்று கூறியவர் குருதேவர். மேலும் கோவில் கமிட்டியார்கள் பிந்துராஜ் கூறுகையில்  மதம் மாறுவது புதிதாக   ஜாதி மதங்கள் உருவாகுவது மற்றும் ஜாதி மதங்களின் அடிப்படையில் மக்களை பிரிப்பதை நாங்கள்  எதிர்க்கிறோம் .




எல்லா மனிதர்களுக்கும் ஒரே ஜாதி ஒரு மதம் ஒரு தெய்வம் என்று  செயல் படுபவர்கள் .நாங்கள் ஜாதி இருக்ககூடாது ஜாதியை எதிர்க்கிறோம் . இப்படி பல்வேறு கோட்பாடுகளை ஸ்ரீ நாராயணகுரு சுவாமிகள் கூறியதை கேட்டு அவரின் எடுத்துறைத்த கோட்பாடுகளை பின்பற்றி வருகிறோம் என தெரிவித்தார்...மேலம் இந்த நிகழ்ச்சிக்கு நீலகிரி  மாவட்ட பல்வேறு பகுதியில் இருந்து வருகை தந்தனர் இந்த அமைப்பானது பந்தலூர் கூடலூர் பகுதிகளில்12.கிளைகள் உள்ளது சுமார் 4000.குடும்பங்கள் உள்ளது என்பது குறிப்பிட தக்கது....


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad