இறந்த மாணவியின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய மாவட்ட ஆட்சியர். நீலகிரி மாவட்டத்தில் அதிகளவில் சத்து மாத்திரையை உட்கொண்டதால், உயிரிழந்த செல்வி.ஜெய்பா பாத்திமா என்ற மாணவியின் குடும்பத்தினருக்கு, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சந்தித்து, ஆறுதல் கூறி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார். நீலகிரி மாவட்டம், உதகை பழைய தபால் நிலையம் பகுதியை சேர்ந்த செல்வி.ஜெய்பா பாத்திமா என்ற மாணவி அதிகளவில் சத்து மாத்திரையை உட்கொண்டதால் உயிரிழந்தார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின் படி, அன்னாரது குடும்பத்தினருக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சா.ப.அம்ரித் இ.ஆ.ப., அவர்கள் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து, ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை இன்று (10.03.2023) வழங்கினார். பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது நீலகிரி மாவட்டம், உதகமண்டலம் வட்டம் மேற்கு கிராமத்தில் உதகமண்டலம் நகராட்சி உருது நடுநிலைப்பள்ளியில் கடந்த 6.3.2023 அன்று 4 மாணவிகள் மற்றும் 2 மாணவர்கள் அளவுக்கு அதிகமாக சத்து மாத்திரையை உட்கொண்டதால் உடல் நலம் பாதிக்கப்பட்டனர் என்றும், இவர்களில் 4 மாணவிகளும் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் செல்வி.ஜெய்பா பாத்திமா, த/பெ.முகமது சலீம், என்ற மாணவி சென்னைக்கு உயர் சிகிச்சைக்காக அழைத்து செல்லும் வழியில் உயிரிழந்தார். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இவரது குடும்பத்தாருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து நிதியுதவி வழங்கிட உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் இன்றைய தினம் மாணவியின் குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண தொகையாக ரூ.3 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இச்சம்பவத்தில், பாதிக்கப்பட்ட மேலும் 3 மாணவிகளுக்கு சிறப்பான சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளார்கள். மேலும், சிகிச்சை பெற்று வரும் மாணவிகளுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாயும் வழங்கப்படவுள்ளது.
இவர்கள் அனைவரும் விரைவில் குணமடைந்து, வீடு திரும்ப வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தெரிவித்தார். இந்நிகழ்வில், உதகை நகர மன்ற தலைவர் திருமதி.எம்.வாணீஸ்வரி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)திருமதி.தனபிரியாஉதகை நகராட்சி ஆணையாளர் திரு.காந்திராஜ், வட்டாட்சியர் திரு.ராஜசேகரன் உட்பட பலர் உடனிருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை நகர செய்தியாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

.jpg)
.jpg)
No comments:
Post a Comment