உப்பட்டியில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் 100க்கு மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 13 March 2023

உப்பட்டியில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் 100க்கு மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்...


உப்பட்டியில் நடைபெற்ற கண் சிகிச்சை முகாமில் 100க்கு மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.  கண்புரை இல்லா மாவட்டம்  உருவாக்கும் நோக்கில் கிராமங்கள் தோறும் இலவச கண் சிகிச்சை முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அதன் அடிப்படையில் நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம், ஷாலோம் சாரிடப்பிள் ட்ரஸ்ட், ஏகம் பவுண்டேஷன் எஸ்ஓய்எஸ்,  எஸ்எஸ்எஃப் உப்பட்டி கிளை ஆகியன இணைந்து உப்பட்டி மதரசாவில் இலவச கண் சிகிச்சை முகாமினை நடத்தினார்கள். முகாமிற்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மைய செயலாளர் சிவசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். ஏகம் பவுண்டேஷன் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ரவீந்திரன், எஸ்ஓய்எஸ்,  எஸ்எஸ்எஃப் மாவட்ட செயலாளர் ஐமுட்டி, நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகி ராஜா,  சூசை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.



நெல்லியாளம் நகர மன்ற உறுப்பினர் ஶ்ரீகலா முகாமினை துவக்கி வைத்தார்.  நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க மருத்துவகுழுவினர் அந்தோணியம்மாள் தலைமையிலான குழுவினர் சிகிச்சை அளித்தனர். கிட்ட பார்வை, தூர பார்வை, கண் அழுத்தம், கண் புரை உள்ளிட்ட நோய்களுக்கு பரிசோதனை சிகிச்சை அளிக்கப்பட்டது. முகாமில் 100-க்கும் மேற்பட்டோர் கண் பரிசோதனை மேற்கொண்டனர். 



40 பேர் கண் புரை அறுவை சிகிச்சைக்கு செய்யப்பட்டனர். முதற்கட்டமாக 10 பேர் கண்புரை அறுவை சிகிச்சைக்கு  உதகை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்று நவீன முறையான லேசர் முறையில் கண்புரை அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. இதில் சிறுவர்கள் கண் பாதிப்பு கண்டறியப்பட்டு இலவச கண்ணாடிகள் வழங்க பரிந்துரை செய்யபட்டது. முகாமில் நுகர்வோர் பாதுகாப்பு மைய நிர்வாகிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad