பந்தலூரை அடுத்துள்ள சேரங்கோடு பகுதியில் 48.வது ஆண்டாக தாயகம் திரும்பிய தமிழ் வம்சாவளியினரால் நடத்தப்பட்ட காமன் பண்டிகை.புராதன கூத்து நிகழ்ச்சி சிறப்பாக நடை பெற்றது...
நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்த ஆமைக்குளம் பகுதியில் ரதி மன்மதன் கதையை கூறும் காமன் பண்டிகை 32வது ஆண்டாக நடைபெற்றது .இரவு முழுவதும் விடிய விடிய நடைபெற்ற இந்த புராதன கூத்து நிகழ்ச்சியை இப்பகுதியிலுளள் தேயிலை தோட்டங்களில் பணிபுரியும் ஏராளமான தொழிலாளர்கள் கலந்து கொண்டு பார்த்து ரசித்தனர். இந்த நிகழ்ச்சி க்கு காமன் பண்டிகை விழா கமிட்டி தலைவர் தலைமை மோகன் பொருளாளர் ராஜா. துனைதலைவர் விஜயராஜ் செயலாளர் தினகரன் விழாஆசிரியர் நாகலிங்கம் வசந்தகுமார் கிருஷ்ணமூர்த்தி.. மற்றும் நிர்வாகிகள் ஊர் பொது மக்கள் ஏற்பாடு செய்திருந்தனர்....
இந்த காமன் கூத்து நிகழ்ச்கள் பல பகுதியில் நடத்தப்பட்டாலும் ஆமைக்குளம் பகுதியில் தொடர்ச்சியாக 48.வது ஆண்டாக இந்த கூத்து நடத்தப்பட்டு வருவதால் இப்பகுதி மக்கள் மத்தியில் பிரபலமடைந்து வருகின்றது. கூடலூர் பந்தலூ தாலுக்கா பகுதியில் 20 இடங்களில் நடைபெறுகிறது மாசி மாதத்தில் நடத்தபடும் இந்த காமன் பண்டிகையில் விரதமிருந்தது தான் கூத்து நடைபெறும் . அந்தந்த கதாபாத்திரத்துக்கு ஏற்ற வேடமிட்டு கலைஞர்கள் கலந்து கொள்கின்றனர். இரவு 10 மணிக்கு மேல் ரதி மன்மதன் திருமனத்துடன் நிகழ்ச்சி துவங்கி அதிகாலை வரை நடை பெறும். பார்வதியின் தந்தை தக்கன் நடத்தும் யாகத்திற்கு மருமகனான சிவனை அழைக்காததால் கோபம் கொண்ட சிவன் தவத்தில் ஆழ்ந்து விடுகிறார். அதே நேரத்தில் இந்திர லோகலத்தில் அரக்கர்கள் தேவர்களை கொடுமைப்ப்படுத்தியதால் அவர்களை அடக்க சிவனை அழைத்து வரசிவனின் தவத்தை கலைக்க மன்மதனை தேர்வு செய்யும் இந்திர லோகத்தினர் ரதி மன்மதன் திருமனம் நடை பெற்ற அன்றே சிவனின் தவத்தை கலைக்க அனுப்புகின்றனர் இதனை விரும்பாத ரதி மன்மதனை அங்கு போகாமல் இருக்க தடுக்கிறாள். ரதி மன்மதன் திருமணம்,சிவனின் தவத்தை கலைத்தால் ஏற்படும் விபரீதம் குறித்து ரதி மன்மதனிடம் எடுத்து கூறுவது,மன்மதன் அதற்கு எதிர்வாதம் புரிவது, தூதுவன்,எமன், காலன் உள்ளிட்டோர் வருவது,போன்ற காட்சிகள் வேசம் கட்டிய கலைஞர்களால் விடிய விடிய நடத்தப்பபடுகின்றது.
ரதியின்எச்சரிக்கையையும் மீறி தவமிருக்கும் சிவன் மீது கரும்பு வில்லால் மன்மத அம்பு விட்ட மன்மதனை நெற்றிக் கண்ணால் சிவன் எரித்து விடுவதும் இறுதி காட்சிகள். மன்மதன் எரியும் சொக்கப்பனையில் (நெருப்பு) வந்திருக்கும் பார்வையாளர்கள் உப்பை தூவி தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றி கலைந்து செல்கின்றனர். பாரம்பரியமாக நடைபெறும் இந்த புராதன கலைகள் வரும் தலைமுறைக்கும் தொடர வேண்டும் என்பதே இதனை தொடர்ந்து நடத்துபவர்களின் கோரிக்கையாக உள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment