நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு அருகாமையில் வீற்றிருக்கும் எமரால்டு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் தைப்பூச திருவிழாவானது இன்றைய தினத்தில் நடைபெற்றது. இதில் எல்லகண்டி முருகன் ஆலயத்தில் இருந்து 108 பால்குடம், பறவை காவடி, பால் காவடி, காவடி ஆட்டம் மேளதாளங்களுடன் திருத்தேர் ஊர்வலமானது எல்லகண்டி முருகன் ஆலயத்தில் இருந்து இத்தலார் கோத்தகண்டிமட்டம் வழியாக எமரால்டு ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்திற்கு வந்தடைந்தது.
பல பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடன்களாக அலகு குத்தியும் பால்குடம் எடுத்தும் வந்திருந்தது பார்ப்பவர்களை பரவசமடைய செய்திருந்தது. திருத்தேரில் முருகன் வள்ளி தெய்வானையுடன் ஊர்வலத்தில் பவானி உலா வருகை தந்து செல்வ விநாயகர் ஆலயத்தில் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு பாலபிஷேகம் செய்து பக்தர்களுக்கு அன்னதானத்துடனும் இந்த விழா இனிதே நிறைவேறியது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment