நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் அமைந்துள்ளது சக்தி மலை ஶ்ரீ வெற்றி வேல்முருகன் திருக்கோயில்...
மலை மேல் அமைந்துள்ள கோயிலில் விநாயகர் முருகன் அம்மன் நாகராஜர் தக்ஷிணாமூர்த்தி சன்னிதானத்துடன் சிவன் கோயில் அமைந்துள்ளது இங்கு பிரதோஷ பூஜை சிறப்பு பெற்றதாகும்
சக்தி மலை முருகன் கோயில் தைப்பூசத் தேர்த்திருவிழா சுற்று வட்டாரங்களில் பிரசித்தி பெற்றதாகும்
இந்த ஆண்டு தை பூசம் திருவிழா 5.-_2.-2023 ஞாயிறு அன்று காலை 5 மணிக்கு ஹோமகுண்ட பூஜையுடன் தொடங்கி மகாதீபாராதனை பக்தி பஜனை பாடல் நடைபெற்று 11.30 மணிமுதல் அன்னதானமும் மாலை 4 மணிக்கு திருத்தேர் ஊர்வல நிகழ்வுடன் மாலை 6.30 மணிக்கு மகா தீபாராதனையுடன் சக்தி மலை முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா நிறைவுபெறும் எனவும் அதுசமயம் திரளான பக்தகோடிகள் கலந்துகொண்டு தைப்பூசத் தேர்த்திருவிழாவை சிறப்பித்து முருகனின் அருள்பெற்று செல்லுமாறு சக்தி சேவா சங்கத்தினர் அழைப்பு விடுத்தார்கள்...
விழாவிற்கு வருகை தரும் அனைத்து பக்த கோடிகளையும் தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு சார்பாக வருக வருக வருக என அன்போடு வரவேற்கிறோம்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment