புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 4 February 2023

புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா...


புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க கேமரா:

  நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் புலி தாக்கி பெண் உயிரிழந்த நிலையில், புலியின் நடமாட்டத்தை கண்காணிக்க களைச் செடிகளை அகற்றி கண்காணிப்பு காமிரா பொறுத்தும்  பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த வாரம் குச்சிகள் சேமிக்க சென்ற 64 வயது பெண் ஒருவரை புலி தாக்கியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அந்த பகுதி மக்கள் புலியை பிடிக்க வலியுறுத்தி கடந்த புதன்கிழமை சாலையை மறித்து போராட்டம் நடத்தினர். அதிகாரிகள் புலியை பிடிப்பதாக நம்பிக்கை தெரிவித்த நிலையில் இன்று  முதுமலை புலிகள் காப்பகம் தெப்பக்காடு பகுதியில் புலி நடமாட்டத்தை கண்காணிக்க அந்த பகுதியில் உள்ள களைச் செடிகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. தொடர்ந்து    கண்காணிப்பு கேமரா பொருத்தம் பணியில் வணத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 26 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை நகர செய்தியாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad