பேரறிஞர் அண்ணா நினைவு தினம் : தொண்டர்களுக்கு வேண்டுகோள்.
பேரறிஞர் அண்ணா அவர்களின் 54-வது நினைவுநாள் பிப்ரவரி 3-ம் தேதி அனுசரிக்கப்படுகிற து. மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் நீலகிரி மாவட்ட கழக உறுப்பினர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார். அதில் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் வழிநின்று செயல்படும் கழக தலைவர் மாண்புமிகு தமிழக முதல்வர் தளபதி அவர்களின் அறிவுரைப்படி பேரறிஞர் அண்ணா அவர்களின் 54-வது நினைவுநாளை ஒவ்வொரு கழக தொண்டனும் அனுசரித்திட வேண்டும்.
அதன்படி நீலகிரியில் எதிர்வரும் 03.02.2023 வெள்ளிக்கிழமை மாவட்ட கழக அலுவலகம் உதகை கலைஞர் அறிவாலய முகப்பிலுள்ள அவர்களின் சிலைக்கு காலை பேரறிஞர் அண்ணா மணியளவில் கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர், இதேபோல் குன்னூர் பேருந்து நிலையம் அருகிலுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் சிலைக்கும் பகல் 12.00 மணிளவில் குன்னூர் ஆஸ்பத்திரி கார்னர் முதல் பேரூந்து நிலையம் வரை மவுன ஊர்வலமாக சென்று அண்ணா அவர்களின் சிலைக்கு கழக நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செலுத்துவர் என்று நீலகிரி மாவட்டச் செயலாளர் பா.மு.முபாரக் அவர்கள் தெரிவித்துள்ளார்.மேலும், கொணவாக்கரை, பெங்காம் ஆகிய பகுதிகளிலுள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்தும், மற்ற இடங்களில் பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவ படங்களுக்கு மாலை அணிவித்தும் மௌன அஞ்சலி செலுத்திட அனைத்து கழக தோழர்களையும் அன்புடன் வேண்டுகிறேன் என்று நீலகிரி மாவட்டச் செயலாளர் பா.மு. முபாரக் அவர்கள் தெரிவித்துள்ளார்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக உதகை நகர செய்தியாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment