கோவையில் நீதிமன்ற வளாகத்தில் வைத்து ஏழு பேர் கொண்ட கும்பல் ஒருவரை வெட்டி கொன்றுவிட்டு சர்வசாதாரணமாக நடந்து சென்றனர் அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவியது வழக்கு பதிவு செய்த கோவை போலீசார் காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களின் உத்தரவின் பேரில் தனிப்படை அமைத்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர் விசாரணையில் கொலைக்குற்றவாளி ஒருவனின் செல்போன் சிக்னல் உதகையை காட்டியது இந்த நிலையில் நீலகிரி மாவட்ட காவல் துறையுடன் இணைந்து தீவிர தேடுதல் வேட்டை நடைபெற்றது கோத்தகிரி இன்ஸ்பெக்டர் திரு. வேல்முருகன் அவர்களின் உத்தரவின் பேரில் தேடுதல் வேட்டை நடத்தியதில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சரவணக்குமார் அவர்களும் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் திரு.விஸ்வநாதன் அவர்களும் திரு.பிரேம்நாத் அவர்களும் கோத்தகிரி காவல் ஆய்வாளர் திரு. வேல்முருகன் அவர்களுடன் திரு. சஞ்சீவி அவர்களும் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. சரவணக்குமார் அவர்களுடன் திரு. அப்பாஸ் அவர்களும் சேர்ந்து நான்கு இரு சக்கர வாகனத்தில் வந்த குற்றவாளிகள் ஆறு பேரையும் சுற்றி வளைத்து மடக்கி பிடித்து கோத்தகிரியில் கைது செய்தார்கள் கோத்தகிரியில் காவல்துறை வாகனங்கள் மற்றும் போக்குவரத்து காவல்துறை வாகனங்கள் கோத்தகிரியில் சுற்றி சுற்றி வந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இன்னிலையில் குற்றவாளிகள் ஆறு பேரையும் காவல்துறையின் பாதுகாப்புடன் கோவை கொண்டு சென்றனர் மேட்டுப்பாளையம் அருகே சென்றபோது வாந்தி வருவதாக கூறி கீழே இறங்கிய இரண்டு பேர் காவலர்களை தாக்கிவிட்டு தப்பிக்க முயன்றனர் குற்றவாளிகள் இருவரது முட்டிக்கு கீழ் சுட்டு பிடித்து கோவை கொண்டுசென்றனர். கோத்தகிரி காவல்துறையின் இந்த செயலை கோவை மாநகர காவல் ஆணையர் திரு.பாலகிருஷ்ணன் அவர்களும் நீலகிரி மாவட்ட காவல் ஆணையர் முனைவர் திரு. பிரபாகர் அவர்களும் வெகுவாக பாராட்டினார்கள்


No comments:
Post a Comment