நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த நாடுகானி பகுதிக்குட்பட்ட அரசு கலைக் கல்லூரி ஓட்டி உள்ள வனப்பகுதியில் காட்டு தீ-க்கு இரையாகி உள்ளன. இதில் மரங்கள் செடிகள் மற்றும் மூலிகை செடிகள் இந்த வனப்பகுதியில் உள்ள விலங்குகள் முக்கியமாக இறந்து நாசமாயின விடுமுறை நாட்கள் என்பதால் வனத்துறையினர் தீயணைப்பதற்கு பாடுபட்டனர் இருப்பினும் தீ பரவி மலை முழுவதும் முற்றிலுமாக எளிதில் நாசமானது அப்பகுதியில் உள்ள மக்கள் தங்கள் குடியிருப்புக்கு தீ பரவாமல் இருப்பதற்காக தங்கள் குடிநீர் தெளித்தும் செடிகளை எடுத்து தீயை அணைக்கும் ஈடுபட்டதால் அப்பகுதியில் குடியிருப்புகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது...
எனினும் அடுத்தடுத்து வெயில் காலங்கள் துவங்கியுள்ளதால் வனத்துறையினர் எச்சரிக்கையாகவும் பாதுகாக்கும் பணி ஈடுபட்டால் மட்டுமே இனி வரும் காலங்கள் இதுபோன்ற தீ எரிவதை தடுக்க முடியும் இன்று எரியப்பட்ட தீ வெயிலின் தாக்கத்தில் ஏற்பட்டதா அல்லது சில விஷமிகளால் ஏற்பட்டதா என்று வனத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜா மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment