எமரால்டு பகுதியில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நிவாரண முகாம்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 11 February 2023

எமரால்டு பகுதியில் சட்டவிரோதமாக பயன்படுத்தப்படும் நிவாரண முகாம்...




 நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியைச் சுற்றி பல்வேறு குக்கிராமங்கள் உள்ளது. இதில் எமரால்டு அன்னை சத்யா நகர், அண்ணா நகர், எமரால்டு வேலி, இந்திரா நகர், சுரேந்திர நகர், கோத்தகண்டிமட்டம் மற்றும் பேலிதளா, இந்திரா நகர், வ உ சி நகர் எம்ஜிஆர் நகர், நேரு நகர், நேருகண்டி, லாரன்ஸ், பாரதி நகர், என பல்வேறு குக்கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களில் உள்ள மக்களுக்கு பயன்படும் வகையில் கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு பெய்த கனத்த மழையின் காரணமாக பல்வேறு சுற்றுவட்டார பொதுமக்கள் தங்களது வீடுகளை இழந்ததால் அன்றைய தினத்தில் மாவட்ட ஆட்சியராக இருந்த நீலகிரி மாவட்ட ஆட்சியர் திரு இன்னசென்ட் திவ்யா இ ஆ ப அவர்களால் எமரால்டு முதல் கோத்தகண்டிமட்டம் செல்லும் வழியில் பெரியார் நகர் அருகாமையில் 60 முகாம் குடியிருப்புகளை கட்டித் தர ஆவணம் செய்தார். அதன் அடிப்படையில் அந்த முகாம்களும் போர்கால அடிப்படையில் உடனடியாக கட்டி முடிக்கப்பட்டு உடனடியாக அந்த முகாம்களில் பொதுமக்களும் தங்க வைக்கப்பட்டனர். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் முன்னாள் மாவட்ட ஆட்சியரின் நினைவாக இந்த பகுதிக்கு "திவ்யா நகர்" என்று பெயர் சூட்டி வந்தனர்...



 இந்நிலையில் நாளடைவில் அவரவர்கள் தங்களது இல்லங்களை சரி செய்து கொண்டு தங்களது சொந்த கிராமங்களுக்கும் அவர்களின் இல்லங்களுக்கும் திரும்பிவிட்டனர். இந்நிலையில் இந்த 60 முகாம் குடியிருப்புகளையும் இந்த பகுதிகளில் உள்ள ஒரு சில ஒப்பந்ததாரர்கள் சட்டவிரோதமாக இந்த முகாம்களை தங்களது வேலை செய்யும் இடங்களுக்கு வரும் பொருட்களை வைப்பு குடோன்களாகவும் தங்களது பணிகளை மேற்கொள்ள வெளி மாநிலத்தில் இருந்து அழைத்து வந்த தொழிலாளர்களை தங்க வைக்கும்  தங்கும் விடுதிகளாகவும் சட்டவிரோதமாக பயன்படுத்துகின்றனர்...



இதுகுறித்து எந்த அரசு அதிகாரிகளும் கண்டு கொள்வதில்லை இந்த முகாம்கள் நஞ்சநாடு ஊராட்சி, முள்ளிகூர் ஊராட்சி இத்தலார் ஊராட்சி ஆகிய மூன்று ஊராட்சிகளுக்கும் உட்பட்ட குக்கிராம மக்கள் பயன்படுத்தும் வகையில் அமைந்துள்ளது...எனவே இந்த ஊராட்சிகளை சார்ந்த அதிகாரிகளும் இதைக் கண்டு கொள்வதில்லை இதனால் ஏழை எளிய பொதுமக்களுக்கு பயன்பட வேண்டிய இந்த நிவாரண முகமானது தற்பொழுது சட்ட விரோதமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது இது குறித்து மாவட்ட நிர்வாகமும் சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் ஊராட்சி நிர்வாகமும் உடனடியாக விசாரித்து தக்க நடவடிக்கை எடுத்து இந்த முகாம்கள் மீண்டும் ஏழை எளிய பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் அமைத்துதர வேண்டும் என எமரால்டு சுற்றுவட்டார பொதுமக்கள் சார்பாகவும் தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு சார்பாகவும் கோரிக்கை விடுக்கிறோம்...

No comments:

Post a Comment

Post Top Ad