நெடுகுளா ஜெடையசுவாமி கோயில் பூ குண்டம் திருவிழா... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 31 January 2023

நெடுகுளா ஜெடையசுவாமி கோயில் பூ குண்டம் திருவிழா...

     


நெடுகுளா ஜெடையசுவாமி கோயில் பூ குண்டம் திருவிழா வெகு விமரிசையாக நடைபெற்றது இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு சுயம்புவாக உருவான  லிங்கத்தை நெடுகுளா ஊர்மக்கள் பரம்பரையாக கோயில் கட்டி வழிபட்டு வந்தனர் மலை மேல் அமைந்துள்ள கோயிலில் வருடம் ஒருமுறை நெடுகுளா ஊரைச் சேர்ந்த ஆண்கள் கடும் விரதமிருந்து பூ மிதித்து ஐய்யணுக்கு நேர்த்திக்கடன்  செலுத்துவர்  இந்த ஆண்டு ஜனவரி 30 அன்று கடும் விரதமிருந்து  44 பேர் பூ குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்...




    அது சமயம் படுகர் சமுதாய பாரம்பரிய நடனம் மற்றும் அன்னதானம் நிகழ்வு வெகு விமரிசையாக நடை பெற்றது  நெடுகுளா ஊர் மக்களும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஊர்மக்களும் நீலகிரி மாவட்டம் முழுவதிலுமுள்ள படுக சமுதாய மக்களும் திரளாக கலந்து கொண்டனர் 31 ம் தேதி நடைபெற்ற    இன்றளவிலும் ஜெடையசுவாமி ஐய்யனின் அருளால் தண்ணீர் பானையில் தானாக உருவாகும் கருப்பு நிற திருநீர் விழா(கப்பு இக்குவ ஹப்ப) சிறப்பாக நடைபெற்றதுபசு கன்று (தபான) பூ குண்டம் இறங்குவதும் எந்த ஊர் கோயிலிலும் இல்லாத தானே உருவாகும் திருநீர்(கப்பு) திருவிழாவும் தனி சிறப்பம்சமாகும்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad