கோத்தகிரி கோடநாடு காட்சி முனையில் இதமான காலநிலையை அனுபவித்த சுற்றுலாப்பயணிகள் - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 7 January 2023

கோத்தகிரி கோடநாடு காட்சி முனையில் இதமான காலநிலையை அனுபவித்த சுற்றுலாப்பயணிகள்

 


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி கோடநாடு காட்சி முனையில் இதமான காலநிலையை அனுபவிக்க சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.



காட்சி முனையிலிருந்து பார்க்கும்பொழுது தெங்குமரஹாடாவின் வயல்வெளிகளும் பவானிசாகர் அணையின் காட்சியும் மைசூர் மற்றும் முதுமலையின் தூரத்து பார்வை காட்சியும் மலைமேல் நின்று ரசிக்கும் பொழுது குளு குளு வென மூலிகை காற்று முகத்தில் படும்போது அதிகமான புத்துணர்ச்சி ஏற்படுவதாக சுற்றுலா பயணிகள் தெரிவித்தனர்




தமிழ்நாடு மற்றும் மற்ற மாநிலத்தை சேர்ந்தவர்களும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கூறுகையில் உதகையில் இட நெருக்கடிக்கிடையில் சுற்றுலா தலத்தை ரசித்த தங்களுக்கு கோடநாடு காட்சி முனையை ரசித்தது டார்ஜிலிங் மற்றும் குலுமணாலியை ரசித்த அனுபவத்தை தந்ததாக கூறினர்


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:

Post a Comment

Post Top Ad