நீலகிரி மாவட்டம் கூடலூர் அடுத்த முதுமலை யானைகள் முகாமில் மொத்தம் 28 யானைகள் வளர்க்கப்படுகின்றன.
பருவ நிலைக்கு பின்பு இன்று யானைகளுக்கு எடை பரிசோதனை செய்யப்பட்டது. இன்று மட்டும் 19 யானைகளுக்கு எடை பரிசோதனை செய்யபட்டது. இதில் சுமார் அனைத்து யானைகளும் 50 முதல் 60 கிலோ எடை வரை கூடி உள்ளதாகவும் இதில் சேரன் 210 கிலோவும் சீனிவாசன் 200 கிலோவும் அதிகப்படியாக கூடியுள்ளது. இந்த வளர்ப்பு யானை முகாமில் 3 யானைகளுக்கு மஸ்த்து ஏற்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள யானைகள் ஒரு சில நாட்களில் எடை போடப்படும் எனவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இதில் முதுமலை துணை நிலை இயக்குனர் வித்யா மற்றும் சரகர் மனோகரன் கால்நடை ஆய்வாளர் ரமேஷ்
துணைசரகர் சரண்யா ஆகியோர் வளர்ப்பு யானையின் எடை பரிசோதனை செய்யும் பொழுது உடன் இருந்தனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் கார் முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment