பேரகணி ஹெத்தையம்மன் திருவிழாவிற்கு காவல்துறையின் பங்களிப்பு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 8 January 2023

பேரகணி ஹெத்தையம்மன் திருவிழாவிற்கு காவல்துறையின் பங்களிப்பு

 


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பேரகணி ஹெத்தையம்மன் திருவிழா கடந்த ஒரு வாரமாக படுகர்களின் கலாச்சாரத்துடன் மிக சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது நாளை நிறைவுபெறும் நிலையில் கடைசி நாளான இன்று நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து படுக சமுதாயத்தினர் மற்றும் சமவெளி பகுதியில் வசிக்கும் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கும் படுக சமுதாய மக்கள் கலந்துகொள்ள இருப்பதால் கட்டுக்கடங்காத கூட்டம் அலைமோதும்

லட்சக்கணக்கான பக்தர்கள் இன்று பேரகணிக்கு வருகை புரிய இருப்பதினால் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் விதத்தில் கோத்தகிரி காவல் ஆய்வாளர் வேல்முருகன் அவர்களின் உத்தரவின் பேரில் போக்குவரத்து காவல் ஆய்வாளர் சரவணகுமார் அவர்களின் தலைமையில் ஊர்க்காவல் படையுடன் இணைந்து ஒருவாரகாலம் சிறப்பாக பணியாற்றிய நிலையில் இன்று அதிகாலையிலேயே அனைத்து காவலர்களுக்கும் அறிவுறை வழங்கப்பட்டது அனைவருக்கும் பணியாற்றுமிடம் குழுக்களாக பிரித்து வழங்கப்பட்டது .





இன்று மட்டும் காவல்துறை போக்குவரத்து காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படையைசேர்ந்த 200 பேர் பணியில் உள்ளதாக கோத்தகிரி காவல் ஆய்வாளர் வேல்முருகன் அவர்கள் தெரிவித்தார். நீலகிரியின் மிகப்பெரிய ஹெத்தையம்மன் திருவிழாவிற்கு 

காவல்துறையின் திட்டமிட்ட நேர்த்தியான பாதுகாப்பு பணியை தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட செய்தி பிரிவு சார்பாகவும் பாராட்டுக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:

Post a Comment

Post Top Ad