
சிற்ப கூடத்தின் நூற்றாண்டு விழா சிற்பிகளும் சிலைகளும் சங்கமிக்கும் பொன்விழா... நீலகிரி மாவட்டம் கோத்தகிரியில் உள்ள நூற்றாண்டு பழமை வாய்ந்த புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியின் நூறாவது ஆண்டு விழா மற்றும் முன்னாள் மாணவ மாணவிகள் சந்திப்பு விழாவானது விமர்சியாக கொண்டாடப்பட்டது. விழாவானது காலை 9மணி அளவில் டானின்டன் பகுதியில் இருந்து அமைதி ஊர்வலமாக துவங்கப்பட்டது. இவ்விழாவானது முன்னாள் மாணவ மாணவியர்கள் மற்றும் பள்ளி நிர்வாகத்தின் ஒத்துழைப்பு மற்றும் பங்களிப்புடன் மிகச் சிறப்பாக நடைபெற்றது. மேலும் இவ்விழாவில் கலை நிகழ்ச்சிகளும் ஆசிரியர் ஆசிரியைகளுக்கு மரியாதை செலுத்துதலும் நடைபெற்றது. இவ்விழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்னாள் மாணவ மாணவிகள் அனைவரும் கலந்து கொண்டு தங்கள் நினைவலைகளை பகிர்ந்தனர். இன்று இவ்விழா நடைபெற்றதில் கோத்தகிரி பகுதியே கோலாகலமாக திகழ்ந்தது. இன்று இவ்விழா நடைபெற்றதில் இப்பள்ளியில் பயின்ற அனைத்து மாணவ மாணவியருக்கு தங்கள் நண்பர்களை சந்திக்கும் ஒரு தருணம் கிடைக்கப்பெற்றதில் அனைவரும் மிக்க மகிழ்ச்சி அடைகின்றனர். இதை காண்பவர்களுக்கும் தங்களது பள்ளியின் நினைவுகளை தூண்டும் வண்ணம் இருந்தது.

இந்த நிகழ்வைப் பற்றி முன்னாள் மாணவர்கள் சார்பில் தெரிவிக்கும்போது பள்ளியின் முன்னேற்றத்திற்காக ஒன்று கூடும் இத்தருனம் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் எனவும் இந்த விழாவானது முன்னாள் மாணவ மாணவியரின் விருப்பத்தின் பெயரில் நடைபெற்றது எனவும் இந்த விழாவின் மூலம் ஒன்று சேரும் நிதியை பள்ளியின் வளர்ச்சிக்காக செலவிடுவோம் எனும் கூறியிருந்தனர் இந்த விழாவானது முன்னாள் மாணவ மாணவியர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து திரைப்படப்பானியில் அனைவரின் அன்பு பரிமாற்றும் நடைபெற்றது அங்கு இருந்தவர்களை வியப்படைய செய்தது...
இந்த விழாவில் கலந்து கொண்ட முன்னாள் மாணவ மாணவியர்கள் மற்றும் இந்த விழாவிற்கு ஒத்துழைப்பு வழங்கிய பள்ளி நிர்வாகத்தினர் அனைவரையும் தமிழக குரல் இணையதள செய்தி குழுமம் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு சார்பாகவும் மனமாற வாழ்த்துகிறோம்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் கோத்தகிரி ஒளிப்பதிவாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...
No comments:
Post a Comment