ஓவேலியில் யானைத் தாக்குதல் மேலும் ஒரு ‘மனித உயிர் பழி அச்சத்தில் ஓவேலி மக்கள்’!..
அரசுக்கு இன்னொரு மரணமா? அரசியல் கட்சிகளுக்கு இது இன்னொரு மரணமா? நீலகிரி மாவட்டம் கூடலூர் ஓவேலி அருகில் உள்ள சீபோர்த் அம்புலி மலை எஸ்டேட் பகுதியில் வசித்து வருபவர் நௌசாத் இவர் அங்கு உள்ள மஞ்ச ஸ்ரீ தனியார் எஸ்டேட்டில் பனிபுரிந்து வருகிறார். இதே போல் அதே பகுதியில் வசித்து வருபவர் ஜமால் இவர்கள் இருவரும் காவக்காரர்களாக எஸ்டேட்டில் பனி புரிந்து வந்தனர். இந்நிலையில் மாலை நான்கு மணிக்கு வழக்கம் போல் வேலைக்கு செல்லும் போது செடி மறைவில் இருந்த யானை இவர்களை கண்டது விரட்டி சென்றது. இவர் குச்சி என்பவரது காப்பி தோட்டத்தில் வைத்து காட்டு யானை தாக்கியதில் நௌஷாத். வயது 40 சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார் உடன் சென்ற ஜமால் 55 வயது விழந்ததில் படுகாயங்களுடன் கூடலூர் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்..
சீபோர்த்தில் உள்ள4.ஆம் நம்பர் பகுதியில் உள்ள மசூதியில் அவரின் உடலை வைத்துக் கொண்டு சீபோர்த்து மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.. அரசுக்கு இன்னொரு மரணமா? அரசியல் கட்சிகளுக்கு இது இன்னொரு மரணமா? கூடலூர் தாலுகா மக்களின் வாக்குவாதம் என்னவென்றால் கடந்த மாதம் ஒருவரை கொன்றது அப்போது வனத்துறை யானையை பிடிப்போம் என்றனர் ஆனால் பிடிக்க வில்லை மக்களை இவர்கள் ஏமாற்றுகிறார்கள்.. ஒரு வார காலத்தில் ஓவேலியில் நிகழ்ந்த இரண்டாவது உயிரிழப்பு இதுவாகும்.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் ஓவேலி பகுதியில் மட்டும் சுமார் 10 பேர் காட்டு யானை தாக்கியது எங்களுக்கு இந்த உயிர் பழிக்கு தகுந்த பதில் தேவை D.F.O வரவேண்டும் இன்னல்களுக்கு பதில் சொல்ல இன்னும் எத்தனை உயிர்கள் வேண்டும் என கூறி சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.. வனத்துறையினர் மற்றும் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால். கூடலூர் பகுதியில் வனவிலங்குகள் அட்டகாசம் செய்து வருவதால், அரசு அதிகாரிகள் அலட்சியம் காட்டுவதாக, கூடலூர் மக்கள் ஆவேசமடைந்துள்ளனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment