கூடலூர் -சேரம்பாடி நாடுகாணி - கேரளா மாநில எல்லை ஆகிய மாநில நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 5 January 2023

கூடலூர் -சேரம்பாடி நாடுகாணி - கேரளா மாநில எல்லை ஆகிய மாநில நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு


                       

கூடலூர் -சேரம்பாடி நாடுகாணி - கேரளா மாநில எல்லை ஆகிய மாநில நெடுஞ்சாலையை சீரமைக்க கோரி காங்கிரஸ், சிபிஐ (எம்) ,சிபிஐ,,முஸ்லீம் லீக்,  விடுதலைச் சிறுத்தைகள் இணைந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு.


 இன்று   மாலை 5 மணிக்கு காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ, விடுதலைச் சிறுத்தைகள் ,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் விடுதலைச் சிறுத்தை கட்சியின் அலுவலகத்தில் சிபிஎம் மூத்த தலைவர் என். வாசுத தலைமையில் நடைபெற்றது. காங்கிரஸ் வட்டார தலைவர் அம்சா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி  மாவட்ட செயலாளர் க. சகாதேவன்,முஸ்லீம் லீக் மாவட்ட துணை செயலாளர் வி.கே.அனிபா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   கூட்டத்தில்  கூடலூர் முதல் சேரம்பாடி -     நாடுகாணி முதல் கேரளா எல்லை வரையிலான மாநில நெடுஞ்சாலைகள் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக  செப்பனிடபடாமல்   உள்ளது .மேலும் நடுவட்டம்  முதல் தொரப்பள்ளி வரையிலான தேசிய நெடுஞ்சாலையும் மிகவும் பழுதடைந்து உள்ளது. சாலைகள் குண்டும் குழியுமாக மோசமான நிலையில் உள்ளது.  




இதனால் பொதுமக்கள் மக்கள் பெரிது பாதிக்கப் படுகின்றனர். வாகன ஓட்டிகள், மருத்துவ தேவைகளுக்கு செல்லக்கூடியவர்கள் வேலைக்கு செல்லக் கூடியவர்கள் என அனைத்து தரப்பு மக்களும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். பல்வேறு அரசியல் இயக்கங்கள் தனித்தனியாக போராட்டங்களை நடத்திய போது அரசு அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தையில் கூடிய விரைவில் சரி செய்யப்ப படும் என தெரிவித்த அனைத்து வாக்குறுதிகளும் பொய்த்துப் போய் உள்ளது. இந்நிலையில் சாலையை சீர் செய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும் உடனே தரமான பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தியும் வரும் 9. 1 .2023 திங்கட்கிழமை காலை 11மணிக்கு கூடலூர் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. தீர்மானம். 2   பாரதிய ஜனதா கட்சி ஆட்சி பொறுப்பேற்ற 9 ஆண்டுகளில் நாடு முழுவதும் பிரிவினையை தூண்டி அரசமைப்புச் சட்டத்தின் சுதந்திரம்,  சமத்துவம்,  சகோதரத்துவ -மதசார்பின்மை கோட்பாடுகளுக்கு எதிராக செயல்பட்டு வருகிறது.எனவே வரும் 29.1.2023 ஞாயிறு அன்று கூடலூரில் மதசார்பின்மையை பாதுகாப்போம் -அரசமைப்புச் சட்டத்தை நிலை நிலைநாட்டுவோம் என்கிற தலைப்பில் கருத்தரங்கம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம்  நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் முகமது கனி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஏரியா கமிட்டி செயலாளர் சி.கே.மணி, காங்கிரஸ் கட்சி நகர செயலாளர் ஷபி,இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்ட இளைஞரணி, செயலாளர் ஷாஜி,விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் புவனேஸ்வரன்,  நகர செயலாளர் துயில்மேகம், துணை செயலாளர் அஷ்ரப் ஆகியோர் கலந்துகொண்டனர்.



நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad