நீலகிரி மாவட்டத்தில் படுகர்களின் குல தெய்வ திருவிழாவான ஹெத்தையம்மன் பண்டிகை வெகு விமரிசையாக நடைபெற்றது. வண்ணகுடையுடன் ஹெத்தையம்மனை செங்கோல் ஏந்திய பரம்பரையினர் ஊர்வலமாக அழைத்துச் சென்றனர் ஏராளமான படுகர்கள் கலாச்சார உடையணிந்து ஊர்வலத்தில் பங்கேற்றனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது மாவட்ட ஆட்சியர் திரு சா ப அம்ரித் இ.ஆ.ப அவர்கள் நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்ததுடன் மட்டுமன்றி பேரகணி கோயில் திருவிழாவில் கலந்துகொண்டார்.
ஏற்கனவே கோத்தகிரி தாசில்தார் அலுவலகத்தில் அமைதிக் குழு கூட்டம் நடை பெற்று விழா கமிட்டியின் ஒத்துழைப்பு மற்றும் அரசு சார்பிலான ஒத்துழைப்பு பற்றி விவாதிக்பட்ட நிலையில் விழா சிறப்பாக நடைபெற்றது கோத்தகிரி காவல்துறை போக்குவரத்து காவல்துறை மற்றும் ஊர்க்காவல் படையுடன் இணைந்து சிறப்பாக பணியாற்றினர்.
அவசர தேவைக்கு ஆம்புலன்ஸ் வாகனம் மற்றும் நடமாடும் மருத்துவ குழுவும் தயார்நிலையில் இருந்தது. அரசு அதிகாரிகள் கூறுகையில் படுகர்கள் கலாச்சார உடையணிந்து நேர்த்தியுடன் கட்டுப்பாடுடன் ஹெத்தையம்மன் திருவிழா கொண்டாடுவது வியப்பாகவும் மகிழ்ச்சியளிப்பதாகவும் இருப்பதாக கூறினர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...


No comments:
Post a Comment