இதனால் அப்பகுதியில் உள்ளவர்கள் வனத்துறையினர்க்கு தகவல் கோடுத்து வந்தனர் இருந்தும் சிறத்தைகளின் நடமாட்டத்தை தடுத்து நிறுத்த முடியாமல் வனத்துறையினர் தினறி வருகின்றனர்.. இன்னிலையில் மண்வயல் காஞ்சிக்கொல்லி பகுதியில் வசித்து வரும் சிவக்குமார். என்பவர் ஆடுகளை வளர்த்து வருகின்றார்.இன்னிலையில் இரவு மூன்று மணி அளவில் ஆட்டு பட்டியில் சத்தம் வருவதை கேட்ட உரிமையாளர் போய் பார்த்த போது சிறுத்தை புலி ஒன்று இரண்டு ஆடுகளை அடித்துள்ளது ஒன்றைக் கொன்றுவிட்டு மற்றொன்று தூக்கி சென்றுள்ளது. இந்த சம்பவம் கால்நடைகள் வைத்து இருப்பவர்கள் மத்தியில் மிகுந்தஅச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்று பிதிர்காடு அடுத்துள்ள நெலாக்கட்டை பகுதியில் வசித்து வருபவர் மணி அவர் இன்று மாலை மாடுகளை தோட்டத்தில் மேய விட்டுள்ளார் .பின்பு மாட்டை வீட்டிற்கு அழைத்து செல்ல மாட்டை தேடிய போது புலி மாட்டை கொன்றுள்ளதை கண்டு மனம் உடைந்து போனார் .அதன் பின் மணி என்பவர் வனத்துறைக்கு தெரியப்படுத்தினார்
சம்பவத்தை அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து நேரில் பார்த்தனர். பின்பு அப்பகுதியில் சில இடங்களை பார்த்து விட்டு கன்கானிப்பு கேமிரா பொருந்தப்பட்டது . அதன் பின் சம்மந்தப்பட்டோரிடம் விசாரித்த போது அது புலி தாக்கியது என மணி கூறியுள்ளதாக தெரிய வருகிறது.. இந்த சம்பவத்தால் ஆடு மாடு வளர்ப்பவர்கள் மற்றும் கிராம மக்கள் மத்தியில் பயத்தை ஏற் படுத்தியுள்ளது....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment