முதுமலையில் உயிரிழந்த காட்டு பன்றிகளை உடலை எரியூட்டும் பணியில் வனத்துறை தீவிரம்
கர்நாடகா மாநிலம் பந்திப்பூர் புலிகள் காப்பகத்தில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சல் காரணமாக ஏராளமான காட்டுப்பன்றிகள் உயிரிழந்தன. தொடர்ந்து அதன் அருகே உள்ள நீலகிரி மாவட்ட முதுமலை புலிகள் காப்பகத்தில் கடந்த சில நாட்களாக காட்டுப்பன்றிகள் தொடர்ந்து பலியாகி வருகின்றன. இதனால் உடல்களை கைப்பற்றி புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமையிலான கால்நடை மருத்துவ குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர்.
மேலும் உடற்பாகங்கள் பரிசோதனைக்காக ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் ஆப்பிரிக்க பன்றி காய்ச்சலால் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் வரை 21 காட்டுப்பன்றிகள் உயிரிழந்ததாக வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்ட நிலையில் நேற்று மேலும் 2 காட்டுப்பன்றிகள் வனப்பகுதியில் இறந்து கிடந்ததை தனிப்படை வன ஊழியர்கள் கண்டுபிடித்தனர்.
இதனை தொடர்ந்து உயிரிழந்த பன்றிகளின் உடலை எரியூட்டும் பணியில் வனத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment