அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் கோலாகால கொண்டாட்டம் மாணவர்கள் உற்சாகம்... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 14 January 2023

அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் கோலாகால கொண்டாட்டம் மாணவர்கள் உற்சாகம்...

 



நீலகிரி மாவட்டம் நாடுகானி அடுத்துள்ள பொன்னூர் அரசு பள்ளியில் சமத்துவ பொங்கல் கோலாகால கொண்டாட்டம் மாணவர்கள் உற்சாகம்... தைப் பொங்கலை முன்னிட்டு பள்ளிகள்  கல்லூரிகள் அலுவலகங்கள்  பொது இடங்கள் போன்ற பகுதிகளில் பொங்கல் விழா துவங்கப்பட்டு பல்வேறு போட்டிகள் நடத்தி கொண்டாடப்பட்டு  வருகிறது .இதே போன்ற  ஒரு நிகழ்ச்சி நாடுகானி அடுத்துள்ள பொன்னூர் பகுதியில் உள்ள அரசு உயர் நிலைப்பள்ளி வைத்து சமத்துவ பொங்கல் நடை பெற்றது..




இந்த பள்ளியில் ஆறு முதல் பத்தாம் வகுப்பு வரை இங்கு உள்ளது இதில் 165.மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர் .   பொங்கல் முதல் நிகழ்ச்சியாக பள்ளி மாணவ மாணவியர் ஆசிரியர்கள் ஒன்றினைந்து பொங்கல் வைத்து மகிழ்ந்தனர் பின்பு   இந்து .முஸ்லிம் .கிருஸ்டீன் போன்ற முன்று மத ஆசிரியர்கள் பள்ளி மாணவ மாணவியர்க்கு பொங்கல் ஊட்டி விட்டு தங்கள் மத ஒன்றுமையை வெளிபடுத்தினர்.   பின்பு மாணவர்களின் விளையாட்டு போட்டியான கயிறுழத்தல் உரியடித்தல் கலைநிகழ்ச்சி நடை பெற்றது இதில்  வெற்றிப்பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினர்..




  இந்த பள்ளியில் இதற்கு முன்  பனியாற்றிய ஆசிரியர்கள்  எந்த ஒரு நிகழ்ச்சியும் சிறப்பாக கொண்டாடியது கிடையாது என்றும் இந்த பள்ளிக்கு வந்த புது தலைமையாசிரியர் கலைவாணி வந்த பிறகு  ஆசிரியர்கள் எங்களுடன் ஒன்றினைத்தை இந்த பொங்கல் விழாவை சிறப்ப்பாக நடத்தி எங்களையும் மகிழச்சி வெள்ளத்தில் மூழ்க செய்தனர் என்று பள்ளி  மாணவ மாணவியர் தெரிவித்தனர்.




இந்த விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர்  கலைவாணி.உதவி தலைமை ஆசிரியர்ரஹீம் . ஆசிரியர்கள் மகேஸ்வரி .அனிதா.மற்று பள்ளி இடை நிலை ஆசிரியர்கள்  பெற்றோர் ஆசிரிய கழக தலைவர் பத்மநாபன்  .பள்ளி மேலான்மை குழ .மாணவர்களின் பெற்றோர்கள் ஊர் இளைஞர்கள் என பலறும் கலந்துக்கொண்டனர்....


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...

No comments:

Post a Comment

Post Top Ad