படுகர் இன மக்களின் எத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday, 4 January 2023

படுகர் இன மக்களின் எத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை...


பாரம்பரிய விழாவான படுகர் இன மக்களின் எத்தை அம்மன் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சா ப அம்ரித் இ ஆ ப அவர்கள்...


மலை மாவட்டமான நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக வாழ்ந்து வரும் பாரம்பரிய இனமான படுகர் இன மக்கள் நீலகிரி மாவட்டத்தில் அதிகமாக வசித்து வருகின்றனர் அவர்களின் பாரம்பரியமான மிக முக்கியமான விழாவாக எத்தை அம்மன் பண்டிகை கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு நாளைய தினம் 04.01.2023 புதன்கிழமை நீலகிரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கல்லூரிகளுக்கும்  உள்ளூர் விடுமுறையை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு சா ப அம்ரித் இ ஆ ப அவர்கள் அறிவித்துள்ளார்.


மேலும் அத்தியாவசியமான அரசு அலுவலகங்கள் மட்டும் குறிப்பிட்ட அலுவலர்களுடன் இயங்கும் எனவும் அறிவித்துள்ளார். இந்த விடுமுறை நாளை ஈடு செய்ய ஜனவரி மாதம் 21ஆம் தேதி பணி நாளாக எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும் இந்த உத்தரவில் பிறப்பித்துள்ளார்...


எத்தையம்மன் பண்டிகையை முன்னிட்டு உள்ளூர் விடுமுறையை அளித்த மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கு நீலகிரி மாவட்டத்தில் உள்ள படுகர் இன மக்கள் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொண்டனர்... 


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....

No comments:

Post a Comment

Post Top Ad