நீலகிரி மாவட்டம் நடுவட்டம் பகுதியில் செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியினை ஏராளமான பொதுமக்கள் பார்வையிட்டு தமிழக அரசின் நலத்திட்டங்கள் மற்றும் சாதனையை குறித்து தெரிந்து கொண்டனர்...
பொதுமக்களிடம் இது பற்றி கேட்கும் பொழுது தமிழக முதல்வர் திரு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள் பதவியேற்ற நாளிலிருந்து பல்வேறு சாதனைகளை செய்து வருகிறார் அந்த சாதனைகளை ஒன்றிணைத்து கண்காட்சியாக இன்றைய தினத்தில் நீலகிரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறையின் சார்பில் புகைப்பட கண்காட்சியாக அமைக்கப்பட்டிருந்தது.
இந்த கண்காட்சியினால் அரசின் பல்வேறு நலத்திட்டங்களையும் பல்வேறு சலுகைகளை பற்றியும் பொதுமக்கள் தெரிந்து கொண்டனர் இந்த புகைப்பட கண்காட்சி ஏற்பாடு செய்த தமிழக அரசுக்கும் நீலகிரி மாவட்ட நிர்வாகத்திற்கும் செய்தி மக்கள் தொடர்பு துறைக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை புகைப்படக் கலைஞர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....


No comments:
Post a Comment