நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள எருமாடு பகுதியில் செயல்பட்டு வரும் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் 4.ஆம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடை பெற்றது. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 3 January 2023

நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள எருமாடு பகுதியில் செயல்பட்டு வரும் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் 4.ஆம் ஆண்டு தொடக்க விழா சிறப்பாக நடை பெற்றது.


பந்தலூரை அடுத்துள்ள எருமாடு பகுதியில் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளை செயல் பட்டு வருகிறது. இந்த அமைப்பு பல்வேறு சமுதாய தொண்டுகள் செய்து வருகிறது . குறிப்பாக மருத்துவம். கல்வி சேவை .ஏழை எளிய குடும்பங்களுக்கு திருமண உதவி தொகை. ஏழை குடும்பத்திற்கு  உணவு  பொருட்கள் மற்றும் கொரோன காலத்தில் ஏழைகளுக்கு உணவு மருந்து போன்ற என்னற்ற உதவிகளை செய்து எருமாடு பகுதியில் மக்கள் மனதில் இடம் பிடித்த அரக்கட்டளையாக செயல்படுகிறது.


இதன் ஒரு பகுதியாக  எருமாடு பஜாரில் ஏபிஜே அப்துல் கலாம் அறக்கட்டளையின் நான்காம் ஆண்டு துவக்க விழா கொண்டாடப்பட்டது. அதில் முதல் விழாவாக ஒட்டப் போட்டி  கலைநிகழ்ச்சி இன்னிசை கச்சேரி போன்றவை நடை பெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு அப்துல் கலாம் அறக்கட்டளையின் தலைவர் அலி தலைமை தாங்கினார். அப்துல் கலாம் அறக்கட்டளையின் ஒருங்கினைப்பாளரும் சேரங்கோடு பஞ்சாயத்து துனை தலைவருமான சந்திரபோஸ் விழா ஒருங்கினைப்பு செய்தார். 

விழாவின் முன்னிலை ஷாம்குமார் அறக்கட்டளையின் செயலாளர். பொருலாளர் அருன்குமார் மானூர். அறக்கட்டளையின் நிதி அறிக்கை துனை செயலாளர் எஸ்கின்ராஜ். துனை ஒருங்கினைப்பாளர் ராகுப் .ஆலோசகர் சிவகுமார். சிறப்பு விருந்தினர்கள் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்ஜெயசீலன். தாளூர் நீலகிரி ஆர்ட்ஸ் அன் சான்ஸ் காலேஜியின் தாலாளர்.ராசிகஷாலி. சேரங்கோடு பஞ்சாயத்து தலைவி லில்லிஏலீயாஸ். மாவட்ட ஊராட்சிஒன்றிய உறுப்பினர் அனிஃபா மாஸ்டர். அறக்கட்டளையின் விழா ஒருங்கினைப்பாளர் உம்மர். மற்றும் அறக்கட்டளையின் உறுப்பினர்கள் பொது மக்கள் கலந்துக்கொண்டனர். 


விழாவின் இறுதியாக அறக்கட்டளையின் துனை தலைவர் சாஜி நன்றி கூரினார். விழாவில் ஓட்டப் போட்டி நடைபெற்றது. முதலாவதாக வந்த கரன் அவர்களுக்கு.2500 ரூபாயும் கோப்பையும்வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து கயிறுழத்தல் போட்டி இதில் கேரளா தமிழ் நாடு எட்டு அணிகள் கலம் இறங்கி விளையாடியது இதில் இறுதியாக கையுன்னி முல் இடத்தையும் கோட்டூர் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தது இந்த வீரர்களுக்கு பண முடிப்பு கோப்பையும் வழங்கப்பட்டது.


இதனை தொடர்ந்து இன்னிசை கச்சேரி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்கு எருமாடு சுற்று வட்டார தன்னார்வலர்களும் கலந்துக்கொண்டது குறிப்பிட தக்கது.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு... 

No comments:

Post a Comment

Post Top Ad