நீலகிரி மாவட்டம் பந்தலூரை அடுத்துள்ள அத்திகுன்னா பகுதியில் மின்னொலி கபாடி போட்டி அடுத்த மாத நடத்த இளம்புயல் விளையாட்டு குழுமுடிவு செய்துள்ளது...
பந்தலூரை அடுத்துள்ள அத்திகுன்னா பகுதியான அத்திமா நகரில் வைத்து மஹாசக்தி மாரியம்மன் கும்பாபிஷேக விளாவை முன்னிட்டு தமிழ்நாடு அமைச்சூர் கபாடி கழகம் மற்றும் நீலகிரி கபாடி வளர்ச்சி குழு பந்தலூர் அத்திக்குன்னா இளம்புயல் விளைய்ட்டு குழு அத்திமாநகர் மற்றும் உப்பட்டி நண்பர்கள் இணைந்து நடத்தும் தென்னிந்திய அளவிலான மாபெரும் மின்னோலி கபடி போட்டியானது உப்பட்டி எம்எஸ்எஸ் விளையாட்டு மைதானத்தில் வைத்து பிப்பரவரி 25.2.2023 மற்றும் 26.2.2023 ஆகிய இரணடு நாட்கள் நடை பெற உள்ளது அன்று காலை 9 மணிக்கு துவங்க உள்ளது . இந்த விளையாட்டில் வெற்றி பெரும் அணிகளுக்கு.
முதல்பரிசு ஒருலட்ச ரூபாய் நினைவு + கோப்பை...
இரண்டாம் பரிசு. ஐம்பதாயிரம் ரூபாய் + கோப்பை...
மூன்றாம் பரிசு. இருபத்தைதாயிரம் + கோப்பையும்...
நான்காம் பரிசு இருபதாயிரம் + கோப்பை...
இந்த விளையாட்டினை இளம்புயல் கபாடி குழுவை சார்ந்த ஆனந் கார்த்திக் சிவா.திலகர்.இ.கார்திக் ஏற்பாடு செய்துள்ளனர்...
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கூடலூர் செய்தியாளர் கார்முகில் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment