நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக டேன் டீ தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பு செய்வதை கைவிட கோரியும் வெற்று அறிவிப்புகளை வழங்கி டேன் டீ மக்களை வெளியேற்ற துடிக்கும் தமிழக அரசை கண்டித்து நீலகிரி மாவட்டம் பந்தலூர் பகுதியில் மாபெரும் மக்கள் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
நீலகிரி மாவட்டம் பந்தலூரில் டேன் டீ தேயிலை தோட்டங்களை வனத்துறைக்கு ஒப்படைப்பு செய்வதை கைவிடக் கோரியும் வெற்று அறிவிப்புகளை வழங்கி டேன் டீ மக்களை வெளியேற்ற துடிக்கும் தமிழக அரசை கண்டித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் இன்று பந்தலூரில் மக்கள் திறன் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.
இதில் சீமான் பேசுகையில் தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டத்தில் நடந்துள்ள நிர்வாக முறைகேடுகள் தொடர்பாக நீதி விசாரணைக்கு உத்தரவிடவும் ,தோட்டங்களை உள்ளடக்கிய நிலங்களை வனத்துறை வசம் ஒப்படைக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்றும் , பணி நீக்கம் செய்த தற்காலிக தொழிலாளர்களை உடனே பணி அமர்த்தி பணி ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் பணிக்கொடை உள்ளிட்டவற்றை உடனே வழங்க வேண்டும் என்றும், தமிழ்நாடு அரசு நிர்ணயித்த தோட்டத் தொழிலாளர் ஊதியமான ரூபாய் 425 உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , கூடலூர் பகுதி மக்கள் மீது ஏவப்படும் அடக்குமுறை வனச் சட்டங்களை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்றும், தனியார் வன பாதுகாப்பு சட்டம் என்கிற பெயரில் கூடலூர் பகுதியில் நிலம் பத்திரப்பதிவு செய்வதற்கு உள்ள தடைகளை விளக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் , ஓவேலி பகுதிகளில் சாலை நடைபாதை உள்ளிட்ட அடிப்படை தேவைகளுக்கு எதிரான வனத்துறையின் அடாவடி தனத்தை உடனே நிறுத்த வேண்டும் என்றும் , மசினகுடி கார்குடி உள்ளிட்ட இடங்களில் பழங்குடி மக்களின் மீது வனத்துறை நடத்தும் அடக்கு முறையை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும், கேரளா தனியார் மருத்துவமனைகளுக்கு தரகர் வேலை பார்ப்பதை விடுத்து கூடலூர் அரசு மருத்துவமனையில் சிறப்பு மருத்துவர் களை உடனடியாக பணியமர்த்தி கூடலூர் மக்களிடம் வீடு கட்ட மின் இணைப்பு பெற கதவு எண் பெற உள்ளிட்டவைகளுக்கு தடை இருப்பதாக சொல்லி பணம் பறிக்கும் வருவாய் துறை வனத்துறை அதிகாரிகளை பணி நீக்கம் செய்ய வேண்டும் என்றும், வனத்துறையின் பொறுப்பற்ற நடவடிக்கையால் குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழைந்து வனவிலங்குகள் மக்களின் மீது நடத்தும் படுகொலையை அடியோடு தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த கண்டன பொதுக்கூட்டத்தில் கேட்டுக்கொண்டார்
மண்ணின் மைந்தர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக தினசரி 425 ரூபாய் வழங்க முடியாத அரசு அவர்களுக்கு அழைத்து வந்து குறைந்தபட்ச கூலியில் பணியமர்த்துவது எந்த வகையில் நியாயம் என சீமான் கேள்வி...
பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கப்பட்ட தமிழ்நாடு தேயிலை தோட்ட கழகத்தில் சொந்தமான நிலங்களை இந்த போராட்டம் நடத்தப்படுகிறது. தாயகம் திரும்பிய தொழிலாளர்களின் நலன்களை பாதுகாத்து அவர்களின் மறுவாழ்வை பாதுகாக்கின்ற வகையில் இந்த தேயிலை தோட்டம் கழகம் உருவாக்கப்பட்டது. இந்த தேயிலை தோட்ட கழகம் சிறப்பாக இயங்கி வரும் தருணத்தில் நஷ்டம் காண்பித்து அதை வனத்துறையினருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவை தொழிலாளர்களின் நலனுக்கு எதிரானது அந்த தொழிலாளர்களின் நலன்களை பாதுகாக்கும் வகையில் இன்று இந்த போராட்டம் நாம் தமிழர் கட்சி முன்னின்று நடத்தி வருகிறது.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக் ஒப்பந்த அடிப்படையில் 15 லட்சம் தொழிலாளர்கள் இந்தியாவிற்கு குறிப்பாக தமிழகத்திற்கு அழைத்து வரப்பட்டார்கள். அவர்களுக்கு எங்கு அழைக்கப்பட்டார்கள் என்று யாருக்கும் தெரியாது அவ்வாறு பணியாமர்த்தப்பட்டுள்ள தொழிலாளர்களின் பாதுகாக்கும் வகையில் நாம் தமிழர் கட்சி முன்னின்று இந்த போராட்டத்தை நடத்தி வருகிறது.
தொழிலாளர்கள் கோரி வரும் குறைந்தபட்ச 25 ரூபாய் கூலியை தர வேண்டும் என்ற கோரிக்கையை அரசு ஏன் கேள்வியாக உள்ளது. இதனால் வரை அரசு நடத்தி வந்தேன் தொழிற்சாலை திடீரென வனத்துறைக்கு ஒப்படைக்கும் வேண்டுமென எடுத்தது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
வனத்துறைக்கு சொந்தமான பகுதிகள் பயன்படுத்தாத நிலையில் அந்த நிலங்களை வனத்துறைக்கு கையகப்படுத்த முடியும் என்று முடியும் என்ற விதிமுறைகள்பின்பற்றப்படுவதாக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ ராசா கூறியுள்ளது கூறிய கேள்விக்கு பதில் அளித்த அவர் தொழிலாளர்களின் பாதுகாக்க ஏற்படுத்தப்பட்ட கழகம் இதுவரை எவ்வாறு செயல்பட்டது 425 ரூபாய் தின கூலி வழங்கி பாதுகாக்க முடியாத நீண்ட நாள் கோரிக்கையாக உள்ளது என்று அவர் கூறிய அவர் வனத்துறையை எவ்வாறு இந்த அரசு பாதுகாக்கும் என அவர் தெரிவித்தார்.
மண்ணின் மைந்தர்களுக்கு குறைந்தபட்ச கூலியாக தினசரி 425 ரூபாய் வழங்க முடியாத அரசு அவர்களுக்கு அழைத்து வந்து குறைந்தபட்ச கூலியில் பணியாமத்துவது எந்த வகையில் நியாயம் என அவர் கூறினார்.
இது இன்று ஒரு நாள் போராட்டம் மட்டுமல்ல இந்த கோரிக்கைகளை அரசு சரி செய்யாவிட்டால் இன்னும் பல போராட்டங்கள் நடைபெறும் என்றும் இன்று பந்தலூரில் நடைபெற்றது போல நாளை கூடலூரில் இதைவிட பெரிதாக ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றார்....
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...




No comments:
Post a Comment