எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா... - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 21 January 2023

எமரால்டு அரசு மேல்நிலைப் பள்ளியின் ஆண்டு விழா...

 


நீலகிரி மாவட்டம் குந்தா தாலுக்கா எமரால்டு பகுதியில் கடந்த 1955 ஆம் ஆண்டிலிருந்து எமரால்டு அரசு பள்ளி ஆனது அரசு ஆரம்பப் பள்ளியாக துவங்கப்பட்டது... இந்நிலையில் கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் அரசு ஆரம்பப் பள்ளி ஆனது  உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது... அதனை தொடர்ந்து கடந்த 2018 ஆம் ஆண்டிலிருந்து இந்த அரசு உயர்நிலைப் பள்ளியானது அரசு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டு செயல்பட்டு வருகிறது...



 இந்நிலையில் இந்த பள்ளியின் ஆண்டு விழாவானது அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது இந்த பள்ளியின் ஆண்டு விழாவானது முப்பெரும் விழாவாக பள்ளியில் விளையாட்டுப் போட்டிகள் நடன போட்டிகள் நடத்தி பரிசளிப்பு விழாவாகவும் ஆண்டறிக்கை விழாவாகவும் மற்றும் முன்னாள் மாணவர்களின் கூட்டமைப்பு துவக்க நாளாகவும் இந்த விழா நடைபெற்றது இந்த விழாவில் முன்னாள் மாணவர்களின் சார்பாக அனைத்து பள்ளி அறைகளுக்கும் சுவர் கடிகாரம் நினைவு பரிசாக முன்னாள் மாணவர்கள் குழுவின் சார்பாக வழங்கப்பட்டது...




 மேலும் இதில் நடனம் விளையாட்டுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்புகளும் சான்றிதழ்களும் கேடயங்களும்  வழங்கப்பட்டது இந்த பரிசளிப்பு விழாவினை பள்ளியின் தலைமை ஆசிரியர் தலைமை தாங்கி நடத்தினார் உடன் ஆசிரியை ஆசிரியர்கள் மாணவ மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவ மாணவியர்கள் எமரால்டு சுற்றுவட்டார பகுதிகளைச் சார்ந்த சிறப்பு விருந்தினர்களும் காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களும் மற்றும் இத்தலார் ஊராட்ச்சி மன்ற தலைவர் அவர்களும் எமரால்டு சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த அனைத்து ஊர் தலைவர்களும் பள்ளி மாணவ மாணவியர்களின் பெற்றோர்களும் பள்ளி மேலாண்மை குழுவினரும்கலந்து கொண்டு இந்த பள்ளியில் நடைபெற்ற நடனம் மற்றும் விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பு விழாவினை கண்டுகளித்து சென்றனர் இறுதியில் பள்ளியின் ஆசிரியர் நன்றி உரை கூறி விழாவினை நிறைவு செய்தார்...


தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் K S T மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.‌‌..

No comments:

Post a Comment

Post Top Ad