நீலகிரி மாவட்டம். பந்தலூர் பகுதியில் உள்ள நெல்லியாள நகராட்சியில் தொழிலாளர் பெயரில் வருங்கால வைப்புத்தொகை திமுக ஒப்பந்ததாரருக்கு விதிகளை மீறி விதியினை மாற்றியுள்ள நெல்லியாளம் நகராட்சி ஆணையாளர் மற்றும் தலைவரை கண்டித்து விடிய விடிய இரண்டாவது நாளாக அதிமுக மன்ற உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம் பந்தலூர் பகுதியில் போலிசார் குவிப்பு....
நீலகிரி மாவட்டம் நெல்லியாளம் நகராட்சியில் 21 வார்டு உறுப்பினர்கள் உள்ளனர் அதில் 5 ஆம் வார்டு உறுப்பினராக இருப்பவர் அதிமுகவை சார்ந்த ஜாபீர் என்பவர் இவர் நெல்லியாளம் நகராட்சி முன்பு அமர்ந்து இரண்டாவது நாளாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் நெல்லியாள நகராட்சி பகுதி பரபரப்பா காணப்பட்டது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF)
தொழிலாளர்களுக்கு ஓய்வுக்காலத்தில் பயனளிக்கும் விதமாக தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது ஒரு நீண்ட கால சேமிப்பு திட்டமாகும். இத்திட்டத்தின் மூலம் தொழிலாளர்களுக்கு ஓய்வின் போது அவர்களது வருங்கால வைப்பு நிதியில் சேமிக்கப்பட்ட சேமிப்புத் தொகை வட்டியுடன் அளிக்கப்படுகின்றன. இதற்காக தொழிலாளர்கள் அவர்கள் பணியாற்றும் காலத்தின்போது, மாதந்தோறும் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, அவரது வைப்பு நிதிக் கணக்கில் செலுத்தப்படுகிறது. இதில் அவர்களுக்கு 12 இலக்க நம்பர் கொடுக்கப்படும் அந்த நம்பரில் அவர்கள் இணையதளத்திலேயே வைப்புத் தொகை கணக்கினை பரிசோதனை செய்து கொள்ளலாம்.
அப்படிப்பட்ட அரசின் விதிகளுக்கு மாறாக நெல்லியாளம் நகராட்சியில் திமுகவைச் சார்ந்த ஏழு ஒப்பந்ததாரர்களுக்கு அடி பணிந்து ஆணையாளர் மகேஸ்வரி திமுகவைச் சார்ந்த தலைவி சிவகாமி ஆகியோர் ஒப்பந்ததாரர்களுடன் கைகோர்த்துக்கொண்டு அரசின் விதிகளுக்கு மாறாக விதிகளை மீறி அரசுக்கு எதிராக செயல்பட்டு வருகின்றனர்
அதனை கண்டித்து பலமுறை அதிமுக நெல்லியாளம் ஐந்தாம் வார்டு கவுன்சிலர் ஜாபீர் கேள்வி எழுப்பியும் அதற்கான உண்மைத்தன்மை நகரட்சி ஆணையாளரும் தலைவரும் நிர்வாகம் ஒன்றிணைந்து அரசுக்கு எதிராக செயல்பட்டு வரும் நெல்லியாலம் நகராட்சியை கண்டித்து அதிமுக மன்ற உறுப்பினர் ஜாபீர் திடீரென்று நகராட்சி அலுவலகம் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார் அதனை அறிந்த அப்பகுதியில் உள்ள அவரது ஆதரவாளர்கள் அங்கு வந்து அவருடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டடு வருகின்றனர். தொடர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்..
நெல்லியாளம் நகராட்சில் நடத்தி வந்த ஆர்ப்பாட்ட காரர்களிடம் வட்டாட்சியர். காவல் துணை கண்காணிப்பாளர். நகராட்சியின் பொறியாளர் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தியதில் பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் தொடர்ந்து போராட்டம் ஆனது முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை ஒளிப்பதிவாளர் அருள்தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு...



No comments:
Post a Comment