நீலகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் வேண்டாம் போதைப் பழக்கம் கலை நிகழ்ச்சிகள் மூலம் அறிவுரை கூறிய மாணவர்கள். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 December 2022

நீலகிரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் வேண்டாம் போதைப் பழக்கம் கலை நிகழ்ச்சிகள் மூலம் அறிவுரை கூறிய மாணவர்கள்.


பந்தலூர் அருகே எருமாடு பகுதியில்,  நீலகிரி மெட்ரிகுலேஷன் பள்ளி சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. முகமது தலைமை வகித்தார். போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் வேலுசாமி துவக்கி வைத்தார். 

சேரங்கோடு ஊராட்சி மன்ற துணைத் தலைவர் சந்திர போஸ் முன்னிலை வைத்தார், பள்ளி வளாகத்தில் துவங்கிய விழிப்புணர்வு பேரணி,  கடைவீதியை வந்தடைந்தது. அங்கு நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், போதை பழக்கங்களால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, மாணவர்கள் தத்ரூபமாக நடித்துக் காட்டியது,  அனைவரையும் கவர்ந்தது. தொடர்ந்து போதை பொருள் இல்லா எருமாடு  எனும் பெயரில், ஜோதி ஏற்றி ஊர்வலம் நடந்தது. 

நிகழ்ச்சியில் பள்ளி நிர்வாகி ஹமீது,  பி.டி.ஏ. தலைவர் பிரிஜித்ஜோசப் மற்றும் வியாபாரிகள் சங்க நிர்வாகிகள்,  பெற்றோர்கள், மாணவர்கள் கலந்துக் கொண்டனர்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக செய்தியாளர் ராஜகான் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad