தமிழ் மாநில போட்டோ வீடியோ மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 1 December 2022

தமிழ் மாநில போட்டோ வீடியோ மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம்.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரி போட்டோ வீடியோ ஒளிப்பதிவாளர்கள் சங்கம் தமிழ் மாநில  போட்டோ வீடியோ மற்றும் அமைப்பு சாரா தொழிலாளர் நலச் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் கோத்தகிரி தொன்போஸ்கோ மலை அரங்கில் நடைபெற்றது.

மாநில செயலாளர் திரு.கபாலீஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று போட்டோ வீடியோ களைஞர்களுக்கான நல வாரியம் அதன் செயற்பாடு உறுப்பினர்களுக்கான நன்மைகள்  பற்றி கூறினார்  மாநில மற்றும் கோவை மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.


கோத்தகிரி போட்டோ வீடியோ சங்க தலைவர் கோபால் தலைமையேற்று சிறப்புரை நிகழ்த்தினார் செயலாளர் ஸ்டுடியோ செல்வம் செயல்பாடுகள் பற்றி கூறினார் பொருளாளர் சுந்தர்ராஜன் வரவேற்றார் துணை தலைவர் சவுந்தரராஜன் துணை செயலாளர் ஸ்டீபன் சட்ட ஆலோசகர் அக்பர் அலி மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டு கூட்டத்தை சிறப்பித்தனர்.


அனைவருக்கும் டெக் டிரேட் யூனியன் அடையாள அட்டை மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது துணைச்செயலாளர் ஸ்டீபன் நன்றி கூறினார்.


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.... 

No comments:

Post a Comment

Post Top Ad