இதனை தொடர்ந்து கூடலூர் காவல் கண்கானிப்பாளர் மகேஷ்குமார் அவர்களின் பார்வைக்கு கொண்டு செல்ல ப்பட்டு பின்பு அவரின் உத்தியின் பெயரில் கூடலூர் ஆய்வாளர் வெள்ளதங்கம், குற்ற தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் இப்ராஹீம், காவலர் முத்துகுமார் அசோக்குமார், இன்ஸ்பெக்டர் அருள், ராமேஸ்வரம் போன்றோர் கூட்டு முயற்சியில் முருகானந்தத்தை கைது செய்து வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்பு அவரிடம் விசாரனை மேற்கொள்ளும் போது இந்த பொருட்களை கர்நாடகாவில் இருந்து தமிழ் நாட்டிற்கு கொண்டு வந்து விற்கப்படுவதாக கூறினார் இவரிடமிருந்து 42 கிலோ பான்குட்கா கூலிப் போன்றவை பறி முதல் செய்யப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட மூட்டையில் இருந்து 2025.பான்குட்கவும்.425.கூலீப்பும் இருந்தன இதன் மொத்த 2450 பாக்கேட்டுகள் இருந்தன, இந்த பொருட்கள் கர்நாடகாவில் இதன் விலை ரூ.22150 தமிழ் நாட்டில் இதன் விலை ரூ. 1.22.500 என் தெரிய வருகிறது. இந்த பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டு முருகானந்த்தை கூடலூர் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.
மேலும் கூடலூர் கண்கானிப்பாளர் மகேஷ்குமார் கூறுகையில் கூடலூர் பகுதிகளில் நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதோடு கடைகளிலும் ஆய்வு மேற்கொழள்கிறோம் எங்களுடைய குழுக்கள் பல்வேறு பகுதிகளிலும் சென்று ஆய்வு செய்வதோடு குற்றங்களையும் தடுத்து வருகிறோம் பொது மக்கள் எங்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.



No comments:
Post a Comment