விசிக தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் கொண்டாட்டம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday, 26 December 2022

விசிக தலைவர் தொல். திருமாவளவன் பிறந்த நாள் கொண்டாட்டம்.


நீலமலை மாவட்டம் கூடலூர் தேவசோலை பேரூராட்சியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு தேவர்சோலை பஜார், பலைய தபால் நிலையம், 8வது மைல், பாலம் வயல், தேவன் 2, மேபீல்டு உள்ளிட்ட முகாம்களில் தேவர்சோலை பேரூர் செயலாளர் சிவசங்கர் தலைமையில் கொடியேற்று நிகழ்ச்சி நடைபெற்றது.  

மாவட்ட செயலாளர் க.சகாதேவன் கலந்து கொண்டு கொடியேற்றி வைத்தார். ஒன்றிய துணை செயலாளர் காந்தி, பேரூர் பொறுப்பாளர்கள் வினோத்  யோவான், அருண், நாகராஜ், வெடிகுண்டு முருகேசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளர்களாக நீலகிரி நாடாளுமன்ற தொகுதி செயலாளர் து. இராஜேந்திரபிரபு, கூடலூர் நகர செயலாளர் துயில்மேகம், நகர பொருளாளர் ரமணா, நகர துணை செயலாளர்கள் அஸ்ரப், சரத், ஒன்றிய பொருளாளர் மோகன்தாஸ், தொழிலாளர் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் அய்யா வேலுச்சாமி, நீலமலை ரவி, காலித், பாவா, சித்திக், சினோஜ், ராஜ், ஜான், ஜெய்சங்கர் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


- நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad