புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதில்லை என அறிவிப்பு பலகை பொறுத்தவும் விழிப்புணர்வு கூட்டம். - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 December 2022

புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதில்லை என அறிவிப்பு பலகை பொறுத்தவும் விழிப்புணர்வு கூட்டம்.


மஞ்சூர் காவல் நிலையம் சார்பாக மஞ்சூர் பகுதி வணிகர்களுக்கு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், புகையிலை பொருட்கள்  அங்காடிகளில் விற்பனை செய்ய கூடாது எனவும் மீறி விற்பனை செய்யும்பட்சத்தில் சோதனை செய்தும் கடைகளுக்கு சீல் வைக்கப்படும் எனவும் வணிகர்கள்  தங்கள் கடைகளுக்கு முன்பு அரசால் தடை செய்யப்பட்ட போதை பொருட்கள், புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதில்லை என அறிவிப்பு பலகை பொறுத்தவும் விழிப்புணர்வு கூட்டம். HK Trust மஞ்சூர். தலைமை செல்வி.விஜயலட்சுமி, துணை காவல் கண்காணிப்பாளர், உதகை ஊரக உட்கோட்டம். மேலும் ஆய்வாளர் திருமதி கண்மணி, உதவி ஆய்வாளர்கள் செல்வன், சசிக்குமார், வேல்முருகன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

சுமார் 50 வணிகர்கள் கலந்து கொண்டனர். தலைவர் சிவராஜ் பொன்னாடை போத்தி வரவேற்றார். பின்னர் உறுதிமொழி எடுத்து கொண்டனர். 


- தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக நீலகிரி மாவட்ட தலைமை செய்தியாளர் கே எஸ் டி மகேந்திரன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad