கோத்தகிரிலிருந்து குன்னூர் நோக்கி அரசு பேருந்து இன்று காலை 15-11-2022 காலை அரசு பேருந்து கோத்தகிரி KPS காலேஜ் அருகில் விபத்துக்குள்ளானது, அதில் இரு சக்கர வாகனத்தில் வந்த ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பேருந்தில் பயணம் செய்த சிலருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது காயம் அடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மலை மாவட்டம் ஆன நீலகிரியில் பயணிக்கும் போது நிதானத்துடன் சென்றால் இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம் என பொதுமக்கள் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர் எனவே மலை மாவட்டங்களில் வாகனம் ஓட்டும் பொழுது பொறுமையாக குறிப்பிட்ட கியர்களை இயக்கி வாகனங்களை இயக்குமாறு தமிழக குரல் இணையதள செய்தி குழுமத்தின் சார்பாகவும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவுவின் அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
தமிழக குரல் இணையதள செய்திகளுக்காக கோத்தகிரி நகர செய்தியாளர் விஷ்ணு தாஸ் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு....


No comments:
Post a Comment