கோத்தகிரி பேருந்து விபத்தில் கோத்தகிரியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் பலி. - தமிழக குரல் - நீலகிரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 15 November 2022

கோத்தகிரி பேருந்து விபத்தில் கோத்தகிரியை சேர்ந்த மகேந்திரன் என்பவர் பலி.


நீலகிரி மாவட்டம் கோத்தகிரியிலிருந்து குன்னூருக்கு அரசு பேருந்து சென்றது பேருந்தை ரகு என்பவர் இயக்கினார், காம்பாய் கடை மற்றும் கார்சிலி பகுதியில் பயணிகளை ஏற்றிக் கொண்டு கே பி எஸ் கல்லூரி அருகே செல்லும் பொழுது  பிரேக் பழுது காரணமாக சுவற்றில்  மோதியது எதிரே ஸ்கூட்டியில் வந்த தாலூக்கா ஆபீஸ் அருகில் மெஸ் வைத்துள்ள மகேந்திரன் என்பவர் பேருந்தின் அடியில் மாட்டிக்கொண்டார்.

பேருந்தில் பயணித்த 14 பேர் வரை காயமடைந்தனர் அனைவரையும் மீட்டு கோத்தகிரி அரசு மருத்துவ மனையில் அனுமதித்தனர் மகேந்திரன் என்பவரை மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் செல்லும் வழியில் உயிரிழந்தார் இந்த சம்பவம் கோத்தகிரி பகுதியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியது கோத்தகிரி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்


- தமிழக குரல் செய்திகளுக்காக கோத்தகிரி செய்தியாளர் கோபாலகிருஷ்ணன் மற்றும் நீலகிரி மாவட்ட தமிழக குரல் இணையதள செய்தி பிரிவு.

No comments:

Post a Comment

Post Top Ad